SELANGOR

கிருஸ்து மதத்தைப் பரப்புவதாக குற்றச்சாட்டு, ஹானா காவல்துறையில் புகார்

ஷா ஆலம், மே 16:

சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர், ஹானா இயோ அண்மையில் வெளிவந்த கட்டுரையில் தாம் கிருஸ்து மதத்தைப் பரப்புவதான குற்றச்சாட்டு அடிப்படையில் யுஎஸ்ஜெ 8, சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார்.

முனைவர் கமாரூல் யூசோப் எழுதிய ” ஹானா இயோ ஜசெகவின் மிகப் பெரிய போலித்தனமானவர் ” புத்தகத்தில் குறிப்பிட்ட அனைத்தும் அவதூறாக இருப்பதும், ஜசெக மலேசிய நாட்டை மதசார்பற்ற நாடாக உருவெடுக்க முயற்சி செய்கிறது என்று புகார் கொடுத்தார்.

”   கமாரூல், என்னுடைய சுயசரிதையான ” ஹானா இயோ: ஒரு தனிப்பட்ட பயணம் ” இடம் பெற்ற எனது தனிப்பட்ட கிருஸ்து மதத்தைப் பற்றிய செய்தியை ஜசெகவை தாக்குதல் நடத்த பயன்படுத்துகிறார். எனது சுயசரிதை வெளியிட்ட பிறகு, இணையதளத்தில் இதே போன்ற தாக்குதல் நடந்தது அனைவரும் தெரிந்ததே, இதில் அதிகப்படியாக ஜசெக கிருஸ்து மதத்தைப் பரப்புவதாக குற்றச்சாட்டு எனது சுயசரிதையை மேற்கோள்காட்டி கூறுகிறார்கள்,” என்று கூறினார்.

 

இதனிடையே, ஜசெக எந்த மதத்தினரையும் கட்டுப்படுத்தவில்லை என்றும் எல்லோரும் தமது மத நம்பிக்கைகளை தாராளமாக அமுல்படுத்தலாம் என்றார்.

”   ஜசெக மீது வீசப்பட்ட அனைத்து அவதூறுகளைக் கண்டு வேதனைப் படுவதாகவும் பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் இனம் மற்றும் மதத்தைப் பயன்படுத்தி அரசியல் லாபம் தேடும் முயற்சியாகும். நான் காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டேன், இதைத் தொடர்ந்து ஜசெகவின் சட்டப் பிரிவு தலைவர் கோபிந் சிங் சட்ட ஆலோசனைகள் வழங்கி அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவேன்,” என்று தெரிவித்தார்.

18446504_10155194645354034_8693150619394277412_n

 

 

 

 

 

 

இதனிடையே, மதசார்பற்ற கொள்கையானது அதிகாரத்தை மற்றும் நிர்வாகத்தையும் மதத்தோடு சம்பந்தப்படுத்தாமல் இருப்பதுதான் தவிர மதத்தைப் புறக்கணிக்க அல்ல என்று ஹானா இயோ விவரித்தார். மதசார்பற்ற நாட்டில் அதன் தலைமைத்துவம் மக்களின் மதங்களை பின்பற்றும் உரிமைகளை மதிப்பார்கள் மற்றும் அங்கீகாரம் கொடுப்பார்கள்.

”   ஜசெகவின் மதசார்பற்ற கொள்கையானது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்படும் பல்வேறு இனம் மற்றும் மதங்களை கொண்ட குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப் படவேண்டும் என்ற வாசகத்தை அடிப்படைஅடிப்படையாகக் கொண்டதுடன்,” என்று தெரிவித்தார்.

ஹானா மேலும் கூறுகையில், தனது சுயசரிதை வாழ்க்கையில் ஒரு மலேசியராக வாழ்ந்த காலம் மற்றும் தனது நாட்டின் பொறுப்புள்ள செயல்பாடுகள் ஆகியவை அடங்கும் என்று கூறினார்.


Pengarang :