MEDIA STATEMENT

தொழில்முறை கல்லூரி உருமாற்றம் முயற்சி மாணவர்களின் கல்வியை தொடர கடினமாகிவிடும்

கல்வி அமைச்சர், டத்தோ ஸ்ரீ மஹாஸிர் காலிட் தேசிய உருமாற்ற திட்டம் (என்திபி) நாட்டின் கல்வி துறையை வலுப்படுத்தவும் மற்றும் மேம்படுத்தவும் அமல்படுத்தியதாக கூறினார். தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி திட்டம் திறன் மிக்க தொழில் நுட்ப மாணவர்களை உருவாக்கி இன்றைய தொழில் துறை தேவைக்கேற்ப தொழில்முறை இடைநிலைப் பள்ளி உருமாற்றம் கண்டு தொழில்முறை கல்லூரியாக மாறுகிறது.

இதனிடையே இந்த உருமாற்றம் பல பெற்றோர்களின் கண்டனத்திற்கு ஆளானது. பெற்றோர்களின் மனக்குமுறலுக்கு கல்வி திட்டம் ஒவ்வொரு முறையும் அமைச்சர் மாற்றம் காணும் போது மாற்றப்பட்டதால் என்று தெரிகிறது. இதில் குறிப்பாக கல்வி அமைச்சு மாணவர்கள் தொழில்முறை டிப்ளோமா முடித்த பிறகு நேரிடையாக இளங்கலை பட்டப்படிப்பு பொது பல்கலைக் கழகத்தில் நுழைய முடியும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் 4 ஆண்டுகள் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பொது பல்கலைக் கழகத்தில் நுழைவு மறுக்கப்பட்டது என்று பல பெற்றோர்கள் தெரிவித்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது.

தொழில்முறை கல்லூரி ஒரு கலப்பு கல்வி நிறுவனமாக செயல்பட்டு கல்வி மற்றும் தொழில் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்க இருக்கிறது. மத்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் ஏனெனில் மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேள்வி குறி ஆகிறது. இன்றைய மாணவர்கள் நாளைய நாட்டின் தலைவர்கள், ஆக கல்வி அமைச்சு சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டால் நிச்சயம் சரியான ஒரு தீர்வு கிடைக்கும்.

* அமினுடின் ஹாருன்

சிக்காமாட் சட்ட மன்ற உறுப்பினர்

மக்கள் நீதி கட்சி


Pengarang :