NATIONAL

புத்ராஜெயாவின் பலவீனம் புரோடோன் நிறுவனத்தின் பங்குகள் அந்நிய நிறுவனத்திற்கு கைமாறியது

உலு கிள்ளான், மே 27:

புரோடோன் நிறுவனத்தின் பங்குகளை ஆடோமோடிவ் கீலி நிறுவனத்திற்கு சக வாணிப பங்காளிகள் வகையில் விற்பனை செய்த நடவடிக்கை மத்திய அரசாங்கத்தின் தேசிய வாகன தயாரிப்பு துறையில் தோல்விவை பதிவு செய்ததாகவே தெரிகிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். புரோடோன் நிறுவனம் உயர்ந்த தொழில் நுட்ப வாகனங்கள் தயாரிக்கும் நாட்டின் தலைசிறந்த நிறுவனம் ஆகும் நிலையில் அதன் பங்குகள் வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்த்து இருக்கும் செயல் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

”   துன் டாக்டர் மகாதீர் சொன்னது போல் நமது தேசிய வாகன நிறுவனம் வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்த்த நடவடிக்கை மிகவும் வருத்தமாக இருக்கிறது. புத்ரா ஜெயா தேசிய வாகனங்கள் தயாரிக்கும் துறைக்கு ஆதரவு தரவில்லை என்று இதிலிருந்து அறியலாம். இதனால் தற்போது புரோடோன் நிறுவனம் அந்நியர் அதிகாரத்திற்கு உட்பட்டு இருக்கிறது. புரோடோன் இப்போது தேசிய கார் அல்ல நமது கையில் இருந்து வெளிநாட்டவரிடம் சென்று விட்டது. இந்த நிலை நாட்டின் பிரதமர் உயர்ந்த தொழில் நுட்ப தயாரிக்கும் துறையின் தோல்வியை காட்டுகிறது. வாகனங்கள் தயாரிக்கும் துறை உண்மையில் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளமாக இருந்திருக்கும்,” என்று விவரித்தார்.

இந்த சக வாணிப பங்காளிகள் ஒப்பந்தம் வழி கீலி நிறுவனத்திற்கு 49.9% பங்குகளும் புரோடோன் நிறுவனத்திற்கு 50.1% பங்குகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஜூலை 2017-இல் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.


Pengarang :