NATIONAL

கெடிஎம் நோன்பு பெருநாள் டிக்கெட்களை திங்கட்கிழமை தொடங்கி விற்பனை செய்யும்

கோலாலம்பூர் , மே 27:

மலாயா ரயில்வே நிறுவனம்  (கெடிஎம்பி) திங்கட்கிழமை காலை 10 மணியில் இருந்து தொடங்கி நோன்பு பெருநாள் டிக்கெட்களை விற்பனை செய்யும் என்று கெடிஎம்பியின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டு மூத்த அதிகாரி, சையில் அப்துல்லா கூறினார். 174,720 டிக்கெட்கள் மின் விரைவு இரயில் சேவை (இடிஎஸ்) வழி 40 விதமான சேவைகள் இதில் அடங்கும் என்றார்.

மேலும் கூறுகையில் 87,360 டிக்கெட்கள் நோன்பு பெருநாள் முன்பாகவும் ( ஜூன் 18 – 24) மற்றும் 87,360 டிக்கெட்கள் பெருநாளுக்கு பிறகும்  (ஜூன் 27-ஜூலை 3) ஒதுக்கீடு செய்திருக்கிறது என்று விவரித்தார்.

தொடர்ந்து பேசுகையில் அவர், 30240 டிக்கெட்கள் நகரங்களிடையே சேவையான எக்ஸ்பிரஸ் ராக்யாட் தீமோரான் மற்றும் எக்ஸ்பிரஸ் சவுத்தர்ன் ஆகிய இரண்டு சேவைகள் ஜூன் 18 தொடங்கி ஜூலை 3 வரை செயல் படும் என்று கூறினார்.

பெர்னாமாவிடம் தெரிவித்தபோது, மனித மூலதன தலைமை நிர்வாகி ஹில்மி ஹாசான் மற்றும் இரயில் தலைமை நிர்வாகி, கைர் ஜோஹாரி இஷாக் உடன் இருந்தனர். ஹில்மி ஹாசான் பேசுகையில், நோன்பு மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 1000 பேரிச்சப்பழ பெட்டிகள் மற்றும் 500 நோன்பு துறக்கும் உணவுகள் வழங்கப்படும் என்று விவரித்தார்.


Pengarang :