LANGKAWI, 12 Mei — Seramai 200 daripada lebih 1,000 pendatang asing tanpa izin (PATI) Bangladesh dan Myanmar Rohingnya yang merupakan kumpulan pertama di hantar ke tanah besar melalui Bot Polis Marin di Jeti Tentera Laut Diraja Malaysia (TLDM) Langkawi hari ini. PATI itu akan ditempatkan di seluruh penempatan tahanan Imigresen di tanah besar. Penghantaran PATI itu diadakan secara berperingat-peringkat. –fotoBERNAMA (2015) HAKCIPTA TERPELIHARA.
MEDIA STATEMENT

அனுமதியற்ற அந்நிய நாட்டாவர்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி மீண்டும் நாட்டுக்குள் நுழைய விடக்கூடாது.

நாட்டுக்குள் சட்டவிரோதமாய் தங்கியிருக்கும் அந்நிய நாட்டவர்களை வெளியேற்றுவதோடு நின்றுவிடக்கூடாது.மாறாய்,அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் நுழையாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என கெஅடிலான் கட்சியின் தேசிய பொருளாளர் டாக்டர் டான் யீ கீயு நினைவுறுத்தினார்.

நாட்டில் அந்நிய நாட்டவர்கள் சட்டவிரோத அந்நியவர்களில் சுமார் 23,000 பேர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுப்பட்டிருப்பதாக சுங்கத்துறை இலாகாவின் தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ முஸ்தாப்பா அலி கூறியிருந்த வேளையில் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் டான் யீ கீயு இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்களில் 6,849 இந்தோனேசியர்களும் 4020 வங்காளதேசியகளும் அடங்குவர் என தெரிய வந்துள்ள நிலையில் விவேகமான சுங்கத்துறையின் செயல்பாட்டை பாராட்டும் அதேவேளையில் வெளியேற்றப்பட்டவர்களும் அல்லதும் சட்டத்திற்கு புறம்பாகவும் நாட்டுக்குள் நுழைவது முற்றாக தடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.சட்டவிரோதமாய் நாட்டுக்குள் நுழையும் நடவடிக்கையை விவேகமாய் கையாள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நாட்டுக்குள் நுழையும் சட்டவிரோத அந்நியர்களை  தடுப்பதில் நாம் தோல்விக் கண்டால் நாட்டில் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பதோடு விபச்சாரம்,உடம்புபிடி மையங்கள் ஆகியவற்றின் மூலம் தொடங்கும் குற்றச்செயல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும் என எச்சரித்தார்.அந்நிய நாட்டாவர்களால் அதிகமாய் ஈடுப்படும் குற்றச்செயல்களாக விபச்சாரமும் உடும்புப்பிடி மையங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில்,சுற்றுலா அனுமதியோடு வருகை புரிவோர் மீது தனி கவனம் செலுத்தப்பட வேண்டும்.அவர்கள் தங்களின் அனுமதிக்கப்பட்ட காலத்தை கடந்து இங்கு தங்குவதும் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுப்படுவதற்கு பெரும் பங்களிப்பதாகவும் விவரித்த அவர் வழிப்பறி,கடத்தல் மற்றும் கொலை ஆகியவை அதில் அடங்கும் என்றார்.

 

tan yee kewஇந்த சட்டவிரோத அந்நியர்களால் மலேசியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கூறிய அவர்  பொருளாதார ரீதியிலும் சமூகவியல் ரீதியில் அஃது பெரும் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.மேலும்,சட்டவிரோத அந்நியநாட்டவர்களால் உள்ளூர் இளம் தலைமுறையினர் வேலை வாய்ப்பை இழப்பதாக சுட்டிக்காண்பித்த அவர் குறைந்த சம்பளத்தில் அவர்களை பொறுப்பற்ற முதலாளிகள் நியமிப்பதாகவும் சாடினார்.

நாட்டில் குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு சட்டவிரோதமான அந்நிய நாட்டவர்களின் பெரும் எண்ணிக்கையிலான வருகையும் பெரும் காரணமாக இருப்பதோடு வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் நம் நாட்டு இளைஞர்களும் குற்றச்செயல்களில் ஈடுப்பட இஃது காரணமாக அமைவதாகவும் கூறினார்.PATI

 

நாட்டில் சட்டவிரோதமான அந்நிய நாட்டவர்களால் நிகழ்ந்து வரும் குற்றச்செயல்களை தடுப்பதில் அரசாங்கம் விவேகமாய் செயல்படுவதோடு ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை கொண்டு  துள்ளியமாய் ஆராய்ந்து அதன் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் டாகடர் டான் யீ கீயு கேட்டுக் கொண்டார்.


Pengarang :