Uncategorized @ta

குறைவான கார்பன், எம்பிஎஸ்ஏவின் இலக்கு

ஷா ஆலாம் – வரும் 2030இல் ஷா ஆலாம் மாநாகர மன்றம் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை வளமாக்க குறைவான கார்பன் கொண்ட மாநகரமாய் உருவெடுக்க இலக்கு கொண்டு பல்வேறு செயல்திட்டங்களையும் செயல்பாடுகளையும் துள்ளியமாய் மேற்கொண்டு வருவதாக அதன் டத்தோ பண்டார் டத்தோ அமாட் ஷாஹாரின் முகமட் ஷாஹாட் தெரிவித்தார்.
இந்த இலக்கை எட்டுவதற்காக கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாய் ஷா ஆலாம் மாநகர மன்றம் (எம்பிஎஸ்ஏ) இம்மாநகரில் குறைவான கார்பன் திட்டத்திற்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை ஆக்கப்பூர்வமாய் மேற்கொண்டு வருவதாகவும் கூறிய அவர் இது தொடர்பில் மக்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வினையும் ஏற்படுத்தி வருவதாக கூறினார்.கார்பன் இல்லாத மாநகரமாய் உருவாக்குவதற்காக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தனித்துவ கவனமும் செயல்பாடும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எம்பிஎஸ்ஏ மேற்கொண்டிருக்கும் இந்த இலக்கு சரியான தடம் நோக்கி பயணிக்க பொது மக்கள் பெரும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் இதற்கிடையில் நெகிழி மற்றும் போலிஸ்ட்ரின் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு அதற்கு மாற்றாக துணி மற்றும் காகிதங்களால் உருவான பைகளை பயன்படுத்த முன் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
செக்க்ஷன் 13இல் ரமாடான் சந்தைக்கு மாநில சுற்றுலா,சுற்றுப்புறம்,பசுமை தொழில்நுட்பம்,பயனீட்டாளர் விவகாரம் மற்றும் கட்டுப்பாடற்ற தகவலுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசெபெட் வோங்வுடன் வருகை அளித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
அந்நிகழ்வில் கலந்துக் கொண்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரமாடான் சந்தையில் வியபாரம் செய்பவர்களுக்கு “எப்ரன்” தொப்பி,உணவுப் பாத்திரம் ஆகியவற்றையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :