SELANGOR

மந்திரி பெசார்: உலு லங்காட் வெள்ளத்தை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்

உலு லங்காட், ஜூலை 15:

மாநில அரசாங்கம் தொடர்ந்து சிறப்பு திட்டங்களின் வழி வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ள பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநில அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

”    இந்த சிறப்பு நடவடிக்கைகள் மாநில நீர்ப்பாசன மற்றும் வடிகால் இலாகாவின் ஒத்துழைப்போடு செயல்படுத்தப் படும். வெள்ளம் மீண்டும் ஏற்பட்டால் பொது மக்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுவது மட்டுமில்லாமல் மாநில பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. வடிகால் மறுசீரமைப்பு பணிகள் மிக சீராக நடந்து முடிவடையும் என்று எதிர் பார்க்கப்பட்டாலும், மேம்பாட்டாளர் சிலருக்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறிவிட்டதால்  கடுமையான எச்சரிக்கை கொடுக்கப் பட்டுள்ளது. வெள்ளப் பிரச்சனைகளை சிறந்த முறையில் எதிர் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில அரசாங்கம் கண்டிப்பாக எந்த மேம்பாட்டாளருடன் கைகோர்த்து நிற்காது. வெள்ளம் ஏற்பட காரணகர்தாவாக இருந்த மேம்பாட்டாளர்கள் தண்டிக்கப்படுவார்கள். மேம்பாட்டாளர்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,” என்று டத்தாரான் நாண்டிங், பத்து 13, கம்போங் டூசுன் நண்டிங்கில் நடந்த உலு லங்காட் நாடாளுமன்ற திறந்த இல்ல நிகழ்வுக்கு பிறகு சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

MB Azmin

 

 

 

 

 

 

இதனிடையே, மந்திரி பெசார் உலு லங்காட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதிகளை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எடுத்து வழங்கினார்.

 

Bantuan Banjir

 

BANTU BANJIR

 

BANTU1

 

#கேஜிஎஸ்


Pengarang :