NATIONAL

டிங்கி சமபவம் தொடர்ந்து அதிகரிப்பு

கோலாலம்பூர் – தொடர்ந்து நாட்டில் டிங்கி சம்பவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.இம்மாதம் 3ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரையிலான டிங்கி சம்பவத்தின் எண்ணிக்கை 1223ஆக பதிவாகியுள்ளது.இதற்கு முந்தைய வாரத்தின் எண்ணிக்கை 1171ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார இலாகாவின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா குறிப்பிட்டார்.இருப்பினும் இந்த எண்ணிக்கை வழக்காமானதாய் இல்லாமல் இருந்தாலும் பாதுக்காப்பாய் இருப்பது அவசியமாகிறது என்றார்.தொடரும் இந்த எண்ணிக்கையை தடுப்பதற்கு அஃது உதவும் என்றார்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் 78,077ஆக இருந்த எண்ணிக்கை அதனை தொடர்ந்து 66,906ஆக இருந்து தற்போது 11,171 குறைந்திருப்பதாகவும் கூறிய அவர் தொடர்ந்து டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் அதனை மேலும் தடுப்பதில் நாம் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றார்.

இதற்கிடையில் டிங்கியால் ஏற்பட்ட மரணம் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருவதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.கடந்த 2016இல் இதே காலக்கட்டத்தில் 176ஆக இருந்த மரணம் எண்ணிக்கை தற்போது 149ஆக குறைந்திருப்பதாகவும் கூறினார்.

மலேசியாவில் இருக்கும் 14 மாநிலங்களில் 438 டிங்கி சம்பவ இடங்கள் அடையாளம்  காணப்பட்டிருப்பதாகவும் அதில் சுமார் 71 இடங்கள் “ஹாட்ஸ் போர்ட்” இடங்களாய் வரையறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

aedes

 

 

 

 

 

 

இதற்கிடையில்,அன்மையில் கெடா சுங்கை ஊடாங்,யான் பகுதியில் சிக்குன்யா நோய் பதிவாகியுள்ளதாகவும் நினைவுக்கூர்ந்த்கார்.செப்டர்ம்பர் 9ஆம் தேதி வரையில் இதுவரை பதிவான சிக்குன்யா நோய்யின் எண்ணிக்கை 255ஆக பதிவாகியுள்ளதாகவும் கூறிய வேளையில் கெடாவில் 189,சிலாங்கூரில் 33,ஜோகூரில் 24,கிளாந்தானில் 7 மற்றும் பேராக் மாநிலத்தில் 2 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.


Pengarang :