SELANGOR

3,264 பேர்கள் வறுமை ஒழிப்பு திட்டத்தில் பலன் அடைந்தனர்

ஷா ஆலம், செப்டம்பர் 24:

வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 3264 தகுதி பெற்ற சிலாங்கூர் வாழ் மக்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி பயன் அடைந்துள்ளனர் என்று சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு, பரிவு மிக்க அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிலாளர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் தெரிவித்தார். மாநில அரசாங்கம், தொடர்ந்து சிலாங்கூரில் வறுமை அளவை சுழியத்திற்கு கொண்டு செல்ல ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

”   வறுமை ஒரு வரையறைக்குள் இருக்கும் பிரச்சனை அல்ல மாறாக இது குறைந்த வருமானத்தினாலும் தனிநபரோ அல்லது குடும்ப தலைவர் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகும் நிலையை காட்டுகிறது. ஆக, மாநில அரசாங்கத்தின் நோக்கத்தை அடைய தொடர்ந்து பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் வறுமையை முற்றாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை மாநில அரசாங்கத்திற்கு இருக்கிறது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

கணபதி ராவ் மேலும் கூறுகையில், மாநில அரசாங்கம் வறுமை ஒழிப்பு முயற்சிகளில் புதிய திட்டங்களை மட்டுமில்லாமல், அடிப்படை கொள்கை மற்றும் வியூகம் அமைத்து முற்றாக வறுமையை ஒழிக்க பாடுபடும் என்று தெரிவித்தார்.

”   மாநில அரசாங்கம் எல்லா மக்களுக்கும் சரிசமமாக வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில் இனம், பாலினம் மற்றும் பின்னணியை நாம் பார்ப்பதில்லை,” என்று தெரிவித்தார்.

இதனிடையே, கணபதி ராவ் உலு லங்காட் மாவட்டத்தில்  14 பேர்களுக்கு வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ரிம 50,050 மதிப்பிலான இயந்திரங்களை வழங்கி சிலாங்கூர் பரிவு மிக்க அரசாங்கம் என நிருபித்து உள்ளார்.

#கேஜிஎஸ்


Pengarang :