RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சியின் நன்மைக்காக நன்றி கூறுகிறேன்

பத்துமலை, அக்டோபர் 2:

சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாடும், பெருமைக்  கொள்ளும் பொருளாதார
வளர்ச்சியும் வெளிளிநாட்டு முதலீட்டார்களுக்கு   ஊக்கியாக இருந்து வருவதால் இம்மாநிலத்தில்  முதலீடு செய்ய  அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி உள்ளது. சமீபத்தில் மாநில அரசு பயணக்குழுவுடன், இந்தியாவுக்கு மேற்கொண்ட   ஐந்து நாள்  பயணம் இதனை உறுதிப்படுத்துவதாக  மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ
முஹமட் அஸ்மின் அலி  தெரிவித்தார்.

”    சிலாங்கூர் மாநிலத்தின் அடைவுநிலையும் அதன் தகவலும் சர்வதேச சமூகத்திடம்  எப்படி கொண்டு செல்லப்படுகிறது?, மற்றும் மாநிலத்தில் செய்யப்படும் முதலீடு மக்களுக்கு உண்மையாகவே பயனைக் கொடுக்கவல்லதா?
என்பதை உறுதி செய்வதற்காக ஒத்துழைப்புப் பிணையத்தை எப்படி உருவாக்க முடியும்? என்பதை நாங்கள் அறிய  விரும்புகிறோம். கிடைத்தத்  தகவல் படி, அவர்கள் முதலீடு செய்வதற்கு  சிலாங்கூர் மாநிலம் பொருத்தமான, பாதுகாப்பான
இலக்கு என்பது தெரியவந்துள்ளது என்றார்  அஸ்மின் .  தாமான் ஸ்ரீ
கோம்பாக்கில் உள்ள அல்கை ரியாமசூதியில் நேற்று  ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் கருணை திட்டம் மற்றும்முதலமைச்சருடன் நல்லுறவு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிருபர்களுடன் பேசுகையில் அஸ்மின் இவ்வாறு கூறினார்.

பல்லின மக்கள், நம்பிக்கை, கலாச்சாரம் ஆகியவன சிலாங்கூர் மற்றும் மலேசிய நாட்டின் தனிச் சிறப்பு அம்சமாக இருப்பது கூடுதல் நன்மையாகப் பார்க்கப்படுகிறது என்றார்  அஸ்மின்.

அனைத்துலகதவர்களையும் நிறுவனங்களையும் ஈர்த்திருக்கும் வகையில் இந்தியா வளர்ச்சி அடைந்திருப்பதால் சிலாங்கூர் முதலீடு அமைப்புடன் கொண்ட இந்தியாவுக்கான அதிகாரத்துவ பயணக்குழு சென்னை, தமிழ் நாடு, ஹைதராபாத், ஆகிய இடங்களுக்குப் பயணத்தை மேற்கொண்டதாக அஸ்மின் தெரிவித்தார்.

உதவும் மனப்பான்மை, ஒருத்தரை ஒருத்தர் மதித்தல் போன்ற தெளிவான கோட்பாடுகளைக் கொண்டிருப்பதாலும்,  மாநில அரசாங்கம் உறுதியாக
இருப்பதினாலும், முதலீட்டாளர்கள் சிலாங்கூரைத் தேர்தெடுக்கும்
நம்பிக்கையைத் தந்துள்ளது என்று   அஸ்மின் கூறினார்.

மேம்பாடு கண்ட மாநிலமாகவும், மக்கள் சகல நலன்களைப்  பெறுபவர்களாகவும்
கொண்டாடப்படும்  சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சியின் நன்மைக்காக நன்றி
கூறுகிறேன் என்றார் அஸ்மின்.


Pengarang :