SELANGOR

சிலாங்கூர் இந்திய சமூகத் தலைவர்கள் ‘புட்சால்’ போட்டி

ஷா ஆலாம், டிசம்பர் 4:

சிலாங்கூர் மாநில நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த இந்திய சமூகத் தலைவர்கள் ஏற்பாட்டில் நேற்று காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை சுபாங் கிராண்ட் ஸ்போட்ஸ் பிளேனட்டில் மிகப்பெரிய அளவில் புட்சால் கிண்ணப் போட்டி நடைப்பெற்றது.

இந்தப் போட்டியில் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தொகுதியில் இருந்து மொத்தம் 32 குழுக்கள் கலந்துக் கொண்டதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கிறிஸ்டி லூயிஸ் தெரிவித்தார். காலை முதல் மாலை வரை நடந்த இப்போட்டியில் கின்ராரா சட்டமன்றத்திற்கு உட்பட்ட பூச்சோங் கம்போங் மெலூர் குழு சாம்பியன் பட்டத்தையும் வெள்ளி 3000 ரொக்கத்தையும் தட்டிச் சென்றது.
பத்து தீகா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பத்து தீகா எப்.சி. குழு 2வது இடத்தையும் வெள்ளி 1500 ரொக்கத்தையும், புக்கிட் காசிங் சட்டமன்றத்தில் உள்ள ஹைபர் ரிச் குழு 3வது இடத்தையும் வெள்ளி 800 ரொக்கத்தையும், ஶ்ரீசெர்டாங் சட்டன்றத் தொகுதியைச் சேர்ந்த ஜேஐசிபி குழு 4வது இடத்தையும் வெள்ளி 500 ரொக்கத்தையும் தட்டிச் சென்றன.

இப்போட்டியில் அதிக கோல்களை அடித்த பிரபாகரர் சிறந்த கோல்மன்னன் விருதையும், கோல்கீப்பர் விருதை தினேஷும், சிறந்த ஆட்டக்காரர் விருதை தமிழ் மாறனும், மேன் ஓன் மேட்ச் விருதை சங்கரும் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதிராவ் பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டியதாக இந்திய சமூகத் தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் இராசேந்திரன் இராசப்பன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இப்போட்டியின் வழி இளம் கால்பந்து விளையாட்டாளர்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.

#வீரத் தமிழன்


Pengarang :