Pelancaran-Rumah-Selangorku-di-Setia-City-Convention-Centre
MEDIA STATEMENTRENCANA PILIHAN

அம்னோ பிஎன் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைக்கிறது & இளையோர்கள் வீடுகள் வாங்க கேள்வி எழுகிறது!!!

அரசாங்கத்தின் வீட்டு வாடகை ஆலோசனை நீண்டகால அடிப்படையிலான தீர்வாகாது. அம்னோ பிஎன் அரசாங்கம்  ஒரு வீடு வாங்குவது  மனிதனுக்கு   அடிப்படை வசதியாகும்  என்ற விதியைக் கூட தெரியாமல்  இருப்பது வேடிக்கை.

டத்தோ ஜோஹாரி கானியின்  ஆலோசனையானது மக்களை மற்றும்  இளையோரை ஏமாற்றுவதாகும். இது மக்களின் விலைவாசி மற்றும் வாழ்வாதாரத்தை கலைய வேண்டிய நடவடிக்கை அல்ல.

எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி, அண்மையில்  லண்டனில் 93% மலேசிய மக்கள் சொந்த வீடுகள்  இல்லாமல் இருப்பதாக “பியோண்ட் திரு பிரிக்” ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்த  எண்ணிக்கை மிக அதிகம் குறிப்பாக  இளையோர்கள் நேரத்தை வீணடிக்காமல் சொந்த வீடு வாங்கும் நிலையை அடைய வேண்டும். அப்படி நாம்  இன்னும் சரியான நேரத்திற்கு   காத்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக வீட்டு விலைகள்  இறங்காது மாறாக ஏறிக்கொண்டே போகும்.

 

கடந்த 2015-இல்  இருந்து  வீட்டு விலைகளின் ஏற்றம் மக்களின் சுயவருமானத்தை விட  அதிகம்  என்றும் குறிப்பிடத்தக்கது. ஆகவே  இள வயதில் வீடு வாங்கும் நிலை மிகச் சிறந்த தேர்வாகும். ஏனெனில்  இது வீட்டுக் கடனுதவி வங்கியிடம் நீண்டகால தவணை( 30 அல்லது 35 ஆண்டுகள்) மற்றும் குறைந்த மாதக் கட்டணமாக பெற உதவிடும்.

டத்தோ ஜோஹாரி கானி  ஏற்கனவே நீண்டகால வீட்டு வாடகை திட்டத்தை பரிந்துரை செய்து, அப்படி  இளையோர்கள் வீடு மற்றும் கார் வாங்கினால்  அவர்களின் வாழ்க்கை சுமைகள் அதிகரிக்கும்  என்றும் தங்கள் வேலையிலும்  மற்றும்  வியாபாரத்திலும் முழுமையாக  ஈடுபடுத்திக் கொள்ள  இயலாது என்று தெரிவித்தார்.

டத்தோ ஜோஹாரி அங்கம் வகிக்கும்  அம்னோ பிஎன் அரசாங்கத்தின்  மோசமான  பொது போக்குவரத்து வசதிகளால் இளையோர் சொந்த கார்கள் வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நிதி  அமைச்சரான ஜோஹாரி கானி ஜிஎஸ்டி & தோல்  வரிகளை அகற்றுவது, எண்ணெய் விலை இறக்கம், இலவச கல்வி, வீட்டு விலைகள் கட்டுப்பாடு, சம்பள  உயர்வு, வீண் செலவுகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு வேண்டுகிறோம்.

இதிலிருந்து டத்தோ ஜோஹாரியும் அவர் சார்பு அம்னோ பிஎன் அரசாங்கமும் மக்களின் சுமைகளையும் இளையோரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள இயலவில்லை, அதற்கு மேல்நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் மோசமடையும்  ஆலோசனைகள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

டத்தோ  அப்துல் ஹலிம் ஹுசேன்

பாலேக் புலாவ் தலைவர்

மக்கள் நீதி கட்சி &

முன்னாள் பினாங்கு மாநில சபாநாயகர்

@கெஜிஎஸ்


Pengarang :