MEDIA STATEMENTNATIONAL

எவ்வளவு நாள் மக்கள், வட்டி முதலைகளால் பாதிக்கப்பட போகிறார்கள்?

பல்வேறு கோணங்களில் இருந்தும் வட்டி முதலைகள் பற்றி பேசப்பட்டாலும் அண்மையில் கோலாலம்பூர் பயனீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர், சம்சுடின் முகமட் ஃபவுசி கூறுகையில்  இந்த சிக்கல் பெரும் பயத்தை உண்டாக்குகிறது.

இந்த சிக்கல் ஒன்றும் நமக்கு புதிதல்ல, பல  ஆண்டுகளாக நம்மை இது  அச்சுறுத்தி  வருகிறது.

1. நமது கேள்வி, எவ்வளவு நாள்  இந்த விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்கப் போகிறோம்? மத்திய அரசாங்கம்  இந்த சிக்கலை ஒடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

மேற்கண்ட கூற்று, மலேசியா  இஸ்லாமிய பயனீட்டாளர்கள் சங்கத்தின்  அறிக்கையின் வாயிலாக நிரூபணம் ஆகிறது.  இந்த  அறிக்கையின் படி  2016-இல் 7000 புகார்களை சங்கம் பெற்றதாகவும்  அதில் காவல்துறை அதிகாரிகள், தனித்து வாழும் தாய்மார்கள், தொழில் முனைவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் பலரும் அடங்குவர்.

2. இதை தொடர்ந்து நான், வீடமைப்பு, உள்ளாட்சித்துறை மற்றும் நகர வாழ்வு அமைச்சை முற்போக்கான திட்டங்கள் எடுத்து  இந்த வட்டி முதலைகள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.

ஏனெனில் கடன் வழங்குவோர் வாங்குவோர் சட்டம் 1951 மற்றும் கட்டளைகள் 2010 (மாற்றியமைக்கபட்டது) இந்த  அமைச்சின் கீழ் அமலாக்கத்தில்   உள்ளது குறிப்பிடத்தக்கது.

3. அளவுக்கு அதிகமான  கடன் வழங்கும் நிறுவனங்களின் தோற்றங்கள் மேலும் அச்சுறுத்திவருகிறது. முறையான  அமலாக்க நடவடிக்கைகள்  இல்லாவிடில் சட்டவிரோத வட்டி முதலைகள்,  உரிமம் பெற்ற நிறுவனங்களின் பின்னணியில் பல்வேறு சிக்கல்களை பயனீட்டாளர்களுக்கு ஏற்படுத்துவார்கள்.

 

4. அரசு இலாகாக்கள்  அமலாக்கப் பணிகளை உறுதியாக  செயல் படவேண்டும்  என்று கேட்டுக் கொள்கிறேன்.

download (1)_0

 

 

 

 

 

 

 

5. இந்த  அமைச்சின் அமைச்சரான டான்ஸ்ரீ நோ ஒமார் தன் பணியை பொறுப்பாக  செயல்பட வேண்டும் எனவும்  ஏனெனில்  இந்த சிக்கல் மக்களை வெகுவாக பாதிக்கிறது. 4000 உரிமம் பெற்ற நிறுவனங்களையும் மேற்பார்வையிட சிறப்பு பணிப் படை தேவை என்றும்  இதில் நோ ஒமாருக்கு வேறு எதுவும் வழியில்லை.

6. மத்திய அரசாங்கம் தனது நிர்வாகத் திறனை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை  மறுஆய்வு செய்ய வேண்டும். டத்தோ ஸ்ரீ நஜிப்பின் கீழ் பொருளாதார வளர்ச்சி தோல்வி அடைந்திருக்கிறது.

நமக்கு நேரம் வந்துவிட்டது, மக்கள்  எதிர் நோக்கும் அன்றாட  சிக்கல்களை தீர்க்க இயலாத நிலையில் இங்கு நான் ஆணித்தரமாக சொல்ல விரும்புகிறேன் பொய்யான நடவடிக்கைகளை நாம் ஆதரிக்க முடியாது.

நாட்டின் தலைவர்கள் பொறுப்புடன் மக்களின் நல்வாழ்வுக்காக  அவர்களை பாதுகாக்கவேண்டும்.

கேசவன் சுப்பிரமணியம்

ஊத்தான் மெலிந்தாங் சட்ட மன்ற உறுப்பினர்

 


Pengarang :