MEDIA STATEMENTNATIONAL

கல்வி அமைச்சு முழுமையாக ஆராய வேண்டும், அவசரப்படக்கூடாது

கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ மஹாஸிர் காலிட் வெளியிட்ட செய்தியில் தன் நிர்வகிக்கும் அமைச்சு மடிக் கணினி, தேப்ளட் மற்றும் கைப்பேசி போன்றவற்றை பள்ளிக்கு மாணவர்கள் கொண்டு வரலாம், இவை  கற்றல் கற்பித்தலுக்கு பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த பரிந்துரை கல்வி  அமைச்சு நன்கு தீர  ஆராய்ந்து முடிவெடுத்தால் மிக சிறப்பாக இருக்கும்.  இதேபோன்ற பரிந்துரை  ஏற்கனவே ஆலோசிக்கப் பட்டதாகவும் ஆனால் பல  எதிர்ப்புக்கு பின் அது கைவிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.

வீடியோ எடுத்து  சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் காலக்கட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கை பள்ளிகளில் நடக்கும்  உணர்வு பூர்வமான நிகழ்வுகள் சமூக ஊடகங்களில் பரவி பள்ளி நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும்.

மாணவர்கள் கைத்தொலைப்பேசி மட்டுமில்லாமல் காமிரா, கணினி மற்றும் மொபைல் கெஜட் போன்றவை தலைமையாசிரியர்  உத்தரவின்படி  பள்ளிக்கு கொண்டு வரலாம்  என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

sandrea

 

 

 

 

 

 

 

எந்த முடிவு எடுக்கும் முன்னர்  மிக ஆழமாக ஆராயும்படியும், இதனால் பெரிய பாதிப்பு இல்லாமல் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சந்தரா எங்,

பேராக் மாநில  கெஅடிலான் கட்சி யின்  இளைஞர் உதவி தலைவர்


Pengarang :