RENCANA PILIHANSELANGOR

ராவாங் வட்டார மக்கள் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை வழி தங்களின் வாழ்க்கை சுமைகள் குறைக்க முடியும்

ரவாங், 21, ஏப்ரல்:

ரவாங் சட்ட மன்ற பகுதியில் வசிக்கும் மக்கள்  இப்போது மகிழ்ச்சியாகவும் நிம்மதியாககவும் இருப்பதிற்கு காரணம் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையின் அறிமுகம்  ஆகும்.

எதிர் வரும் ஜுலை மாதத்தில், இந்த  இலவச சேவையை மாநில அரசாங்கம் அறிமுகம் செய்யும் வேளையில்  பொது போக்குவரத்து சேவை  மக்களுக்கு  மாற்றத்தையும் பெரிய அளவில் நன்மைகளையும் அளிக்கப்படும் என்று  எதிர் பார்க்கப்படுகிறது.

ரவாங் சட்ட மன்ற உறுப்பினர் கான் பெய் நீ கூறுகையில், மாநில அரசாங்கம் குறிப்பாக ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம்மிற்கு நன்றி தெரிவிப்பதோடு கடந்த  ஒரு வருடமாக  இச்சேவைக்கு முயற்சி செய்ததாக கூறினார்.

 

gan pei nei1

 

 

 

 

 

 

 

” ஸ்மார்ட்  சிலாங்கூர் பேருந்து மக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வட்டார மக்களும் இதன் மூலம் பயன்  அடைவார்கள் என்றும் தற்போது பொது போக்குவரத்து சேவைகளின் தேவைகள்  அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து நேர்மறையான தாக்கத்தை  ஏற்படுத்தியது என்றும் இதன் மூலம் மக்கள் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்த தூண்டுகிறது. தொடர்ந்து மக்களின் பொருளாதார  சுமைகளையும் குறைப்தோடு   மாணவர்கள்  இந்த  இலவச சேவையை பயன்படுத்தவும் வழி வகுக்கும்.

இப்பேருந்துச் சேவை இப்பகுதியில் நிலவும்  போக்குவரத்து நெரிசலையும் குறைக்க கூடிய  ஆற்றல்  உள்ளது என்று தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்து விவரிக்கும் பொழுது, மாநில  அரசாங்கம் மேலும்  ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்  என்றும் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து  இச்சேவையை பயனுள்ளவையாகவும் திறன் மிக்க வகையிலும் இருக்க முயற்சிமுயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

 

-NFN-


Pengarang :