A 27
RENCANA PILIHANSELANGOR

லெம்பா சுபாங் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பு சிக்கலுக்கு தீர்வு

ஷா ஆலம், 20 ஏப்ரல்:

லெம்பா சுபாங் அடுக்குமாடி  மக்கள் வீடமைப்பு திட்டம்  (பிபிஆர்) சார்பில்  எழுந்த சிக்கலுக்கு மக்களின்  ஒருமித்த ஆதரவோடு தேங்கிக் கிடந்த பாக்கிகளை கட்டம் கட்டமாக செலுத்த  ஒத்துக் கொண்ட  போது தீர்வு கண்டது.

மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ  இஸ்கண்டர் அப்துல் சமத் கூறுகையில்  எம்பிபிஜே இந்த வீடமைப்பு பகுதியை சுத்தம் செய்ய ஒப்புதல் அளித்ததுடன் சிக்கலுக்கு தீர்வு கண்டது.

மேலும் கூறுகையில், மத்திய அரசாங்கம்  வாய் ஜாலங்கள் வழி  இந்த வீடமைப்பு நிர்வாகத்தை  எடுத்து கொள்வதாக கூறினாலும் முறையான  அர்ப்பணிப்பு இல்லாமல் செய்ய முடியாது.

” மாநில மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மக்களோடு நடந்த கலந்துரையாடல் வழி எம்பிபிஜே வீடமைப்பு பகுதியை சுத்தம் செய்யும் பணியை தொடங்கும் என்றும், அதேவேளையில் மத்திய அரசாங்கத்தின் கீழ் எந்த  ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பவில்லை.” என்று தெரிவித்தார்.

“மத்திய  அரசாங்கம் பல்வேறு வெற்று வாக்குறுதிகளை  கொடுத்தாலும்  மாநில அரசாங்கம் தொடர்ந்து இந்த பிபிஆர் சிறந்த முறையில் பராமரிக்க உதவும் என்றும் கூறினார்.

ISKANDAR SAMAD


Pengarang :