PBTSELANGOR

வடிகால் மற்றும் நீர்ப்பாசன இலாகா நீர் தேக்கியை மேம்படுத்துகிறது

செலாயாங், 27 ஏப்ரல்:

வடிகால் மற்றும் நீர்பாசனத்துறை இலாகா (ஜெபிஎஸ்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் தேக்கி குளங்களை தரம்  உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

செலாயாங் நகராண்மை கழகத்தின் தலைவர் சுலைமான் அப்துல் ரஹ்மான் கூறுகையில், தனது தரப்பு ஜெபிஎஸ்-இன் துணை இயக்குனர், அஸ்மி இப்ராஹிம்  உடன் தொடர்பு கொண்டதாகவும்  அவர் மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்தியது வருவதாக தெரிவித்தார்.

MPS Suliman_Abd_Rahman

 

 

 

 

 

“ஜெபிஎஸ்  சில  இடங்களில் நீர் தேக்கி குளங்களை அமைக்கும்  எனவும்  இது தீடிர் வெள்ளம் மீண்டும் வராமல் இருக்க வகை செய்யும். ” என்றார்.

” இதற்கிடையே, எம்பிஎஸ் ஜெபிஎஸ்ஸை நீர் தேக்கி குளங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது,” என்றார் அவர்.

இதற்கு முன்பு, கம்போங் சுங்கை செராய், தாமான் துன் பேராக் பகுதிகளில் கடந்த 16 மற்றும் 18 ஏப்ரலில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று துயர்துடைப்பு மையங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திறக்கப்பட்டது.


Pengarang :