Empat penguat kuasa MBSA direman tujuh hari berkaitan siasatan kes menerima dan mengutip rasuah.
NATIONAL

அரசாங்க ஊழியர்களை ஊழல்வாதிகள் என்ற முத்திரை அளவுக்கு செல்ல வேண்டாம் – ஜோஹாரி அப்துல்

ஷா ஆலம், மே 19:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுச் சேவை ஊழியர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் சுங்கைப்பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஹாரி அப்துல் கூறினார். ஒரு சில ஊழல்வாதிகளின் செயலால் அனைத்து பொதுச் சேவை ஊழியர்களின் நற்பெயரை களங்கப்படுத்தும் என்று விவரித்தார்.

”  ஊழலில் ஈடுபடும் பொதுச் சேவை ஊழியர்கள் சேவைத் தரம் தாழ்ந்து இருக்கும் என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இவர்களின் பங்களிப்பு இருக்காது,” என்று கூறினார்.

JOHARI ABDUL

 

 

 

 

 

”   ஊழல் வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர்களின் சேவை உடனடியாக நிறுத்தப் பட வேண்டும். எஸ்பிஆர்எம், நடைமுறைகளை மீறும் மற்றும் லஞ்சம் வாங்கி பொதுச் சேவை ஊழியர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

பொதுச் சேவை தற்போது நம்பகத்தன்மை எதிர்நோக்கி வருகிறது என்ற டான்ஸ்ரீ அலி அம்ஸாவின் அறிக்கையை மேற்கோள்காட்டி ஜோஹாரி கருத்து உரைத்தார்.


Pengarang :