Majlis Perbandaran Subang Jaya (MPSJ)
PBTSELANGOR

எம்பிஎஸ்ஜே திறந்த வெளி குப்பைகளை அகற்றும்

சுபாங் ஜெயா, மே 27:

சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஸ்ஜே) திறந்த வெளி மொத்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடும். இது தனது அதிகாரப்பூர்வ ஊராட்சி மன்ற பொறுப்பு இல்லை என்றாலும் சமூக அக்கறையின் பேரில் கடமை ஆற்றி வருகிறோம் என்று தற்காலிக எம்பிஎஸ்ஜேவின் தலைவர் ஸுல்கார்னயன் சீ அலி கூறினார்.

”   நெருக்கடியான குப்பைகளை அகற்றும் பணி பெரும்பாலும் மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் வீடமைப்பு நிர்வாகம்  (ஜேஎம்பி) இல்லாமல் அல்லது பொறுப்பற்ற குப்பை அகற்றும் நிறுவனங்கள் செயல்பாடுகளில் ஏற்படும். இந்த சூழ்நிலையில், எம்பிஎஸ்ஜே குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவது சகஜமாக நடந்து வருகிறது, இது எங்களின் பொறுப்பு அல்ல. ஜேஎம்பி அல்லது குப்பைகளை அகற்றும் ஏஜெண்டுகள் பணிகளை சரிவர செய்யவில்லை என்றால் நாங்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுகிறோம்,” என்று எம்பிஎஸ்ஜே தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குப்பை அகற்றும் நிறுவனம் மற்றும் ஜேஎம்பி குப்பை அகற்றுவதில் தோல்வி அடைந்த நிலையில் மக்களின் குறைகூறல்களை அடிப்படையில் இப்படி கூறினார்.

ஆனாலும் ஸுல்கார்னயன் கூறுகையில், எம்பிஎஸ்ஜே தொடர்ந்து தனது பொறுப்புகளை தாண்டி பெரிய அளவில் செலவு செய்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதாக கூறினார்.


Pengarang :