RENCANA PILIHANSELANGOR

ஒருமித்த சிந்தனைகளுடைய சிலாங்கூர் நிர்வாகம், மாநில பொருளாதார நிலைத்தன்மையை அதிகரிக்கும்

ஷா ஆலம், மே 9:

வெளிப்படையான நிர்வாக நடைமுறை மற்றும் முதிர்ச்சியான நிலைத்தன்மையான அரசியல் பண்பாடு சிலாங்கூர் மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் எனவும் கடந்த  இரண்டு தவணைகளில் மாநில அரசாங்கத்தை பாக்காத்தான் சிறந்த முறையில் வழி நடத்தியதாக கூறப்பட்டது.

மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறுகையில், மலேசிய பொருளாதார ஆராய்ச்சி கல்லூரி நடத்திய ஆய்வின்படி நிலைத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த நிர்வாகம் கொண்டு இருக்கும் சிலாங்கூர் மாநிலம் மேம்பாட்டு நடவடிக்கையில் முதல் நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறது.

”   இந்த வெற்றியானது ஒற்றுமையான மக்கள் மற்றும் நிலைத்தன்மையான அரசியல் சூழ்நிலை என்று எம்ஐஇஆர் அறிவித்துள்ளது  எனவும் சிலாங்கூரின் பலம் தொடர்ந்து இதே போன்று நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து வந்தால் பெரிய அளவில் சாதனை படைக்கும். சிலாங்கூரின் நிர்வாகம் விவேக அடிப்படையில் மற்றும் தூர நோக்க சிந்தனைகளின் வழி சமூக நலன் சார்ந்த அரசாங்கமாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

Azmin MB

 

 

 

 

 

 

 

ஷா ஆலம் பல்நோக்கு மண்டபத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு பேசினார்.

மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் 2013-இல் 6.8% , 2023-இல் 6.5% தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும்  என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இன்றைய  அரசியல் சூழ்நிலையில் புத்ராஜெயா அரசாங்கத்தின் தொடர் தாக்குதல்கள் மாநிலத்தின் நிலைத்தன்மையை சீர்குலைக்கிறது என்று விவரித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் நமக்கு அளித்த நம்பிக்கை மற்றும் ஆதரவு நாம் அனைவரும் ஒன்றிணைந்து மாநில மேம்பாட்டு திட்டங்கள் வெற்றி அடைய பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 


Pengarang :