ANTARABANGSARENCANA PILIHAN

டுதேர்தே துருக்கி மற்றும் மங்கோலியாவை ஆசியான் அமைப்பில் சேர அனுமதிக்க வேண்டும்

மணிலா, மே 17:

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுதேர்தே துருக்கி மற்றும் மங்கோலியாவை தென் கிழக்கு ஆசியா நாடுகளின் அமைப்பில்   (ஆசியான்) இணைய அனுமதி தர வேண்டும் எனவும் பூகோளம் அடிப்படையில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றார். ஏஎப்ஃபி அனைத்துலக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் டுதேர்தே, துருக்கி மற்றும் மங்கோலியா ஆகிய இரண்டு நாடுகளும் ஆசியானில் சேர விருப்பம் தெரிவித்தனர் என்று விவரித்தார். இந்த எண்ணத்தை பெய்ஜிங்கில் நடந்த அனைத்துலக ஒருங்கிணைந்த போக்குவரத்து பாதை மாநாட்டில் பங்கேற்ற போது தம்மிடம் தெரிவித்ததாக கூறினார்.

பிலிப்பைன்ஸ் தற்போது ஆசியான் அமைப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறது. டுதேர்தே துருக்கி அதிபர் ரிகேப் தாயிப் எர்டோகன் மற்றும் மங்கோலிய பிரதமர் ஜர்கால்துல்கா எர்டெனபாட் ஆகியோரை தனிப்பட்ட முறையில் மாநாட்டில் பங்கேற்க பொது சந்தித்ததாக கூறினார்.

ஆசியான் புருணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற  10 நாடுகளின் அமைப்பாகும்.

ASEAN

 

 

 

 

துருக்கி மேற்கு ஆசியாவில் அமைந்த நாடு மட்டுமில்லாமல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உள்ள நாடாகும். இன்னும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெற வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து வருகிறது. மங்கோலியா ரஷ்யா மற்றும் சீனாவை ஒட்டி உள்ள நாடாகும். ஆசியான் நாடுகளில் இணைய பூகோளம் முதல் அடிப்படையாகும். மேலும் எல்லா உறுப்பு நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.Turki

 

 

 

 

 

இதுவரையில், இந்தோனேசியாவில் அமைந்துள்ள  ஆசியான் செயலகத்தின் வாயிலாக எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. தீமோர் தீமோர் மற்றும் பாபுவா நியூ கினி போன்ற தென் கிழக்கு ஆசியா நாடுகள் இன்று வரை பார்வையாளர்களாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Pengarang :