ANTARABANGSA

தென் சீன கடல் பகுதியில் கடலுக்கு அடியில் கண்காணிப்பு மையத்தை அமைக்க சீனா திட்டமிடுகிறது

குலோபல், மே 30:

சீனா கடலுக்கு அடியில் கண்காணிப்பு மையத்தை அமைக்க உத்தேசித்து வருகிறது. தென் சீனக் கடலில் இதை அமைத்து அந்நிய கப்பல்களின் போக்குவரத்தை கண்காணிக்க பயன்படுத்த போவதாக நிபுணர்கள் கூறினர். சிசிடிவி எனப்படும் சீன நாட்டின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிட்டத்தட்ட 2 பில்லியன் யுவன்  ($ 290 மில்லியன்) செலவில் நிர்மாணிக்கப்பட்டு புள்ளியல் சேகரிக்கும் மையமாகவும்  மற்றும் கடல் ஆராய்ச்சி நிலையமாகவும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

சீனா, தென் சீன கடல் பகுதியில் சில தீவுகளை சொந்தம் கொண்டாடும் நாடுகளில் ஒன்றாகும்.இதன் அடிப்படையில் சீனா தனது ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்துள்ளது. மேலும் சீனா ராணுவ தளவாடங்களையும் இந்த தீவுகளில் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிஎன்என் தனது செய்தியில் சீனா இன்னும் கடலுக்கு அடியில் கண்காணிப்பு மையத்தை அமைக்கும் தேதியை அறிவிக்கப்படவில்லை என்றும் இந்தச் செயல் வட்டாரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டியது.

சிசிடிவி மேலும் கூறுகையில் இந்த திட்டம் கடல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஏனெனில் சீனா ‘கடல் வல்லரசு’ என்ற நிலையை அடைய எண்ணம் கொண்டுள்ளது என்று விவரித்தது.

இதற்கு முன்பு அமெரிக்கா, தென் சீனக் கடலில் சீனாவின் ராணுவ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா நொரின்கோ சிஎஸ்/ஏஆர்-1 55எம்எம் ரக ஏவுகனையை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

=EZY=


Pengarang :