RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார் : கட்சித் தாவல் செய்தி வெறும் தீயசக்திகளின் செயல்பாடுகள்

செப்பாங், மே 5:

சில சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவி மாநில அரசாங்கத்தை கைப்பற்றும் செய்திகள், தீயசக்திகள்  ஏற்படுத்தும் முயற்சியே ஆகும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த நடவடிக்கை மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையை சீர்குலைக்க முயற்சிகள் என்றும் ஆனால்  எல்லா கட்சிகளின் சார்பில் சட்ட மன்ற உறுப்பினர்கள் வந்திருப்பது இது வெறும் வீண் வதந்தி என்று நிருபித்து இருக்கிறது.

”   இவையெல்லாம் மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மை கெடுக்க நினைக்கும் தீயசக்திகளின் செயல்பாடுகள். ஆனால் நான் எனது சட்ட மன்ற உறுப்பினர்களின் மீது நம்பிக்கை வைத்து  இருக்கிறேன். அவர்கள் சிறந்த சேவையை வழங்கி வருகிறார்கள். மேலும் தங்களின் வேலையை குறிப்பாக மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். நமது எதிரிகள் போல அரசியல் சித்து வேலைகளை செய்யாமல் நேர் வழியில் சேவையை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று தெரிவித்தார்.

மந்திரி பெசார் அரபு நாடுகளுக்கான பயணத்தை முடித்த பிறகு எகிப்து நாட்டில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்த போது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது கூறினார்.

கெஅடிலான் கட்சியில் இருந்து விலகி விட்டார்கள் என்று டாக்டர் டரோயா அல்வி (செமந்தா), ரோஸ்ஸியா இஸ்மாயில் (பத்து தீகா ), யாக்கோப் சப்பாரி  (கோத்தா  அங்ரிக்) மற்றும் டாக்டர் இட்ரிஸ் அமாட் (ஈஜோக்) போன்றவர்களின் பெயர்களை சம்பந்தப்படுத்தி வீண் வதந்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஸ் கட்சியின் மாநில  ஆட்சிக் குழு உறுப்பினர்களான டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் மற்றும் டத்தோ டாக்டர் அமாட் யூனுஸ் ஹய்ரி, அவர்களுடன் மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களான டாக்டர் அப்துல் ரானி ஓஸ்மான்  (மேரு), டாக்டர் காலியான அலி  ( செலாட் கிள்ளான்) மற்றும் ஹஸ்புல்லா முகமட் ரிஸுவான்  (கோம்பாக் செத்தியா) போன்றவர்களின் பெயர்களும் சம்பந்தப்படுத்தி பேசப்பட்டது.

ஆனால்  இந்த வீண் வதந்திகளில் கூறப்படும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் டாக்டர் டரோயா அல்வி மற்றும் டத்தோ டாக்டர் அமாட் யூனுஸ் ஹய்ரி ஆகிய இருவரும் மாநில மந்திரி பெசாருடன் அரபு நாடுகளுக்கான பயணத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு ஆட்சிக் குழு உறுப்பினரான நிக் நஸ்மி நிக் அமாட்டும் இந்த பயணத்தில் மாநில மந்திரி பெசாருடன் இருந்தார்.

 


Pengarang :