SUKANKINI

ஷா ஆலம் இளையோர் குழு வெற்றி வாகை சூடியது

கோம்பாக், மே 15:

ஷா ஆலம் இளையோர் குழு, மாண்புமிகு அமிருடின் ஷாரி ஒன்பதன்மர் கிண்ண கால்பந்து போட்டியில் சுங்கை தெரெந்தாங் 2 குழுவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. வெற்றி பெற்ற குழு ரிம 2000 மற்றும் வெற்றிக் கேடயமும் இரண்டாம் நிலை குழுவிற்கு ரிம 1000 மற்றும்  பதக்கங்களும் வழங்கப்பட்டன.

2015-இல் வில்லியம் லியோங் கிண்ண கால்பந்து போட்டியாக அறிமுகப்படுத்தி 20 குழுக்கள் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது. குவாங் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர், சலாசிலா டீசா கூறுகையில்  இந்த ஆண்டு இக்கிண்ணம் மாநில இளைஞர் மேம்பாட்டு நலன், விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் அமிருடின் ஷாரியின் பத்து ஆராங் விளையாட்டு மைதானத்தை சீரமைப்பு செய்த சேவையை மனதில் கொண்டு அவரின் பெயரில் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மைதானத்தை சமநிலை படுத்தியது, புதிய புல் நடும் நடவடிக்கை மற்றும் மைதானத்தை சுற்றி வேலி அமைத்தது போன்ற மேம்படுத்தும் பணிகளை அமிருடின் ஷாரியின் கீழ் செய்து தரப்பட்டது எனவும் கூறினார்.

இந்த கால்பந்து விளையாட்டு போட்டி பத்து ஆராங் இளைஞர் அணி, செலாயாங் தொகுதி கெஅடிலான் இளைஞர் பிரிவு, மாநில ஆட்சிக் குழு, செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர், செலாயாங் நகராண்மை கழகம், பத்து ஆராங் கிராமத்து தலைவர் மற்றும் ஜெகெகெகெ பத்து ஆராங் ஆகிய அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :