ECONOMY

எம்ஏஎச்பி: பயணிகளின் எண்ணிக்கை 6.3% உயரந்து 10.6 மில்லியன் ஆனது

கோலா லம்பூர் ஜூன் 10:

மலேசியா விமான நிலைய நிறுவனமான மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) அறிக்கையின் படி மே 2017 வரை பயணிகள் எண்ணிக்கை 10.6 மில்லியன் ஆக உயர்வு கண்டது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 6.3% உயரந்து காணப்பட்டது என்று பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளது.

மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் மேலும் கூறுகையில் அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கை 4.8 மில்லியன் அதாவது 12.6% உயரந்து காணப்பட்டது என்றும் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை 1.5% உயரந்து  5.8 மில்லியன் ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில், விமான நிலைய நிறுவனமான எம்ஏஎச்பி 7.1% வளர்ச்சி கண்டு 122.9 மில்லியன் பயணிகள் பதிவு செய்த வேளையில், இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையம்  (கெஎல்ஐஏ) பயணிகள் எண்ணிக்கை 12.7% உயர்வு கண்ட வேளையில் கெஎல்ஐஏ2 11.6% வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

எம்ஏஎச்பி தனது அறிக்கையில் மே மாதம் 2017-இல் மட்டும் 7.9 மில்லியன் பயணிகளை பதிவு செய்த வேளையில் இது கடந்த ஆண்டை விட 8.5% உயரந்து காணப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: பெர்னாமா செய்தி


Pengarang :