SELANGOR

சிலாங்கூர் மாநில அரசு,168 தோட்டத் தமிழ்பள்ளி மாணவர்கள் பேருந்து கட்டண உதவி நிதி வழங்கியது

கோலா சிலாங்கூர், ஜூன் 19:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகள் நிதியின் கீழ் பள்ளி பேருந்து கட்டண உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சிகள் ஐந்து தமிழ்ப் பள்ளிகளில் நடந்ததாக மாநில தோட்டத் தொழிலாளர், வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

2008-க்கு முன்பு இருந்த மாநில அரசாங்கம்  தமிழ்ப் பள்ளிகளை மாற்றான் தாயைப் போல நடத்தி வந்தாலும் தற்போதைய சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி எல்லா சமூகத்தையும் சார்ந்த மாணவர்கள் முறையான கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் படுவதாக பெருமைப் படுவதாக கணபதி ராவ் கூறினார்.

இன்று வரை மொத்தம் 168 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பேருந்து கட்டண உதவி நிதியாக ரிம 300-ஐ பெற்றுக் கொண்டனர் என்றும், இது வரை ரிம 50,400 முதல் கட்ட உதவி நிதி வழங்கப்பட்டன என்று தெரிவித்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் அவரோடு மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (யுபென்), நகராண்மை கழக உறுப்பினர்கள், இந்திய கிராமத்து தலைவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

முதல் கட்ட பேருந்து கட்டண உதவி நிதி பெற்ற தோட்டத் தமிழ்ப் பள்ளிகள்:

1. புக்கிட் ரோத்தான் தமிழ்ப் பள்ளி, கோலா சிலாங்கூர்

2. சுங்கை ரம்பாய் தமிழ்ப் பள்ளி, கோலா சிலாங்கூர்

3. தாமான் பெர்மாத்தா தமிழ்ப் பள்ளி, டெங்கில்

4. பூலாவ் கேரி தமிழ்ப் பள்ளி, கோலா லங்காட்

5. ஆர்ஆர்ஐ தமிழ்ப்  பள்ளி, சுங்கை பூலோ

#கேஜிஎஸ்


Pengarang :