PBTSELANGOR

தேசிய மிருகக்காட்சி சாலையில் ‘அப்டவுன்’ கடைகள் அனுமதி

ஷா ஆலம், ஜூன் 24:

அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) தேசிய மிருகக்காட்சி சாலையின் கார் நிறுத்துமிடத்தில் ‘அப்டவுன்’ வியாபாரக் கடைகள் செயல் பட அனுமதி வழங்கியுள்ளது என எம்பிஏஜேவின் தலைவர் அப்துல் ஹமீத் ஹுசேன் தெரிவித்தார். ஏறக்குறைய 100 வியாபாரிகள் மற்றும் ‘பூஃட் டிரக்’ தங்களின் பொருட்களை மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தின் கீழ் செயல்பட அனுமதிக்கப் படுவார்கள் என்று கூறினார்.

எதிர் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த ‘அப்டவுன்’ கடைகள் ஆரம்பிக்கப் படும் என்றும் இது மாலை 6 மணி முதல் இரவு மணி 12 வரை திறக்கப்படும் என்றார்.

”   திறக்கப்படும் ‘அப்டவுன்’ மிருகக்காட்சி சாலைக்கு வருமானம் ஈட்டித்தரும் வகையில் தினந்தோறும் செயல்படும். கார் நிறுத்துமிடம் மூடியே கிடக்கிறது, மிருகக்காட்சி சாலை நிர்வாகம் இதை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

MPAJ

 

 

 

 

 

இதனிடையே, மற்றொரு நிலவரப்படி அப்துல் ஹமீத் ஹுசேன் கூறுகையில் 1,170 உணவகங்கள் எம்பிஏஜேவின் கீழ் செயல்படுவதாகவும், இந்த ஆண்டு இவை அனைத்தும் மீண்டும் தர பரிசோதனைக்கு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். இது வரை 447 உணவகங்களில் பரிசோதனை நடந்துள்ளது என்றும் விவரித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :