ECONOMYRENCANA PILIHANSELANGOR

மின்னியல் வர்த்தக முதலீடு வலுப்படுத்தப்படும்

ஷா ஆலாம் – மின்னியல் வர்த்தகத்தில் முதலீடு செய்து சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரத்தை மற்றுமொரு சிறந்த தலம் நோக்கி கொண்டு செல்ல சிலாங்கூர் மாநில அரசு ஆயத்தமாக இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கீம் தெரிவித்தார்.

இதற்கான அடிப்படை முதன்மைகளை எஸ் ஐ தி இ சி எனப்படும் தொழிநுட்ப தகவல் மற்றும் சிலாங்கூர் மின்னியல் வர்த்தக மன்றத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றும் சிலாங்கூர் மாநிலம் அதில் முதன்மை நிலையில் இருப்பதாகவும் மின்னியல் ரீதியிலான வர்த்தகத்திலும் அந்நிலையை சிறந்த இலக்கிற்கு கொண்டு செல்வதற்கான ஆயத்தப்பணியையும் மாநில அரசாங்கம் ஆக்கப்பூர்வமாய் மேற்கொள்வதாகவும் கூறினார்.

நடப்பியல் நிலையில் மின்னியல் வர்த்தகத்திற்கு  நாடு தன்னை உருமாற்றம் செய்துக் கொண்டிருப்பதாகவும் நாட்டின் பொருளாதார பங்களிப்பில் மின்னியல் வர்த்தகம் 17 விழுகாடு அதன் பங்களிப்பினை செய்து வருவதாகவும் கூறினார்.

அவ்வகையில்,மின்னியல் வர்த்தல் முதலீட்டின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சிலாங்கூர் மாநில பொருளாதாரத்தை அடுத்தக்கட்ட இலக்கிற்கு கொண்டு செல்லவும் பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை மாநில அரசாங்கம் விவேகமாய் சிறந்த நிலையில் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி,எஸ் ஐ தி இசி மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களில் இலவச கல்வியும் ஒன்றாக விளங்குவதாகவும் கல்வியல் ரீதியில் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளும் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும்,மின்னியல் வர்த்தகத்தின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிட்டுவதோடு அவர்களின் வர்த்தக்ப்பொருளின் முத்திரை நிலைக்கொள்வதோடு மட்டுமின்றி கூடுதல் வருமானமும் ஈட்ட முடிவதாக தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமின்றி,மின்னியல் கட்டற்ற வர்த்த செயல்பாட்டின் மூலம் அதிலுள்ள சவால் மற்றும் போட்டித்தன்மையை நன் முறையில் எதிர்க்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில்,அம்மன்றத்தின் தலைமை ஹ்நிஇன்ர்வா யோங் காய் பிங் கூறுகையில் இதுவரை எஸ் ஐ தி இ சி மன்றத்தின் மூலம் இதுவரை 3000க்கும் மேற்பட்டவர்களை உருவாக்கியிருப்பதாகவும்  அதில் மின்னியல் வர்த்தகம் 100 எனும் திட்டத்தின் கீழ் சுமார் 200 பேர் இணையம் வாயிலான வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருப்பதாகவும் கூறினார்.அவர்கள் 3 மில்லியன் வரையிலான லாபத்தை சுமார் 10,000 வர்த்தகப் பொருட்களின் மூலம் கடந்தாண்டு பெற்றிருப்பதாகவும்  கூறினார்.

இணையம் வாயிலாக வர்த்தகத்தில் ஈடுப்படுவதை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வரவேற்பதாகவும் சுமார் 400 எளிய வர்த்தக வாய்ப்பினை கூகல் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பில் ஸ்டோர் மூலம் மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

 

 


Pengarang :