PENDIDIKANRENCANA PILIHANSELANGOR

டாக்கா,வங்காளதேசத்தில் யுனிசெல்

ஷா ஆலாம் – சிலாங்கூர் பல்கலைக்கழகம் எனப்படும் யுனிசெல் அதன் புதியதொரு தலத்தை வரும் ஆகஸ்ட் மாதம் டாக்கா வங்காளதேசத்தில் அமைப்பதற்காக முன்னெடுப்புக்கள் நடந்து வருவதாகவும் அஃது வரும்  செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் எனவும் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் மொக்தார் அப்துல்லா குறிப்பிட்டார்.

இதன் மூலம் சிலாங்கூர் மாநில பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் தங்களின் உயர்கல்வியினை தொடரும் வாய்ப்பு விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

யுனிசெல் அந்நாட்டின் Institute Of Learning (INSIGHT)  கல்வியல் நிலையத்தின் அழைப்பினை ஏற்று இந்த முன்னெடுப்பினை மேற்கொண்டிருப்பதாகவும் இதன் மூலம் அந்நாட்டு மாணவர்களும் பெரும் நன்மையடைவர் எனவும் கூறினார்.

நடப்பியல் சூழலில் வங்காளதேசத்தில் உயர்க்கல்வியை முடித்த மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 700,000ஐ எட்டியுள்ள நிலையில்  அதனை மேம்படுத்தவும் புதியதொரு தலம் நோக்கி கொண்டு செல்லவும் இஃது வழிகோலும் என்றார்.

டாக்காவில் புதிய தலம் அமைக்கும் பணி 95 விழுகாடு முடிவுற்றிருக்கும் நிலையில் அஃது வரும் ஆகஸ்ட்டு மாதம் நிறைவடையும் என்றும் கூறிய அவர் முதற்கட்டமாக சுமார் 500 பேர் பதிவு செய்வர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் சிலாங்கூர் மாநில மாணவர்களை அங்கு அனுமதிப்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.இருப்பினும் மாணவர்கள் கல்வி பரிமாற்றத்தின் கீழ் அத்தகைய செயல்பாடுகள் வருங்காலங்களில் சாத்தியமாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :