MEDIA STATEMENT

அரசாங்கத்தை மாற்றும் வழி மட்டுமே ஊழலையும், மோசடிகளையும் மற்றும் குடும்ப ஆட்சியையும் நிறுத்த முடியும்

கோலா லம்பூர், ஜூலை 7:

நாட்டு மக்கள் அனைவரும் இன்று 1 மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்டிபி) ஊழலை தெரிந்து வைத்திருக்கின்றனர். மக்களின் பணம் என்று கூறப்படும் ரிம 20 பில்லியன் தவறான முறையில் கையாளப்பட்டு, எம்ஓ1-வின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகாக்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த செலவுகளுக்கு குறிப்பாக ஆடம்பர கப்பல் பயணம், ஆறு நட்சத்திர தங்கும் விடுதி, ஆபாச படம் தயாரிப்பு  மற்றும் பல்வேறு வீண்செலவுகள் மூலம் பொது மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் 1எம்டிபி ஊழலை மறைக்க அந்நிய செலாவணி மோசடியை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆனாலும் நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது ஆத்திரமாக உள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கெஅடிலான், எல்லா ஊழலையும் விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தியது அனைவரும் அறிந்ததே.

1எம்டிபி ஊழலை மறைக்க முயலும் எந்த நடவடிக்கையும் நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்தும் முயற்சியாகவே கெஅடிலான் கருதுகிறது. அனைத்துலக சமூகம் இன்று மலேசியாவை ஒரு ஊழல் மிகுந்த நாடாகவும் அல்லது கிளிப்தோகிராட் ஆட்சி செய்யும் நாடுகளின் பட்டியலில் இணைத்து விட்டது வருத்தத்தை அளிக்கிறது.

1.   நாட்டு மக்கள் ஊழல் செலவுகளை பற்றி யோசிக்க வேண்டும். இதுவரை நடந்த மோசடிகள் மற்றும் குடும்ப ஆட்சியை நடத்தி வரும் அம்னோ தேசிய முன்னணியின் உண்மை உருவத்தை பொது மக்கள் உணர வேண்டும். மோசடிகள் 1எம்டிபியோடு  நின்று விடவில்லை, மாறாக சபா குடிநீர் வாரியத்தல் நடந்த மில்லியன் கணக்கான நிதி மோசடி, அரசாங்கத்தின் உயர் பதவியில் உள்ளவர்கள் சக்திக்கு மீறிய சொத்துடமை மற்றும் ஜோகூரில் நடந்த பூமிபுத்ரா வீடமைப்பு ஊழல் போன்ற இமாலய மோசடிகளை பதிவு செய்து உள்ளது.

2.   தற்போதைய அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம், அரசு சார்புடைய நிறுவனங்கள் மற்றும் சில அரசாங்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு நாட்டிற்கு பேரிழப்பை தந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

3. மறுமலர்ச்சி மற்றும் அரசு மாற்றம் செய்தால் மட்டுமே எல்லா சிக்கல்களுக்கும் ஒரு முடிவு கட்ட முடியும். அப்படி நாட்டு மக்கள் தொடர்ந்து அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தை ஆதரவு அளித்தால் நாடு குட்டிச்சுவராகி ஆகி விடுவது மட்டுமில்லாமல் நாட்டின் நற்பெயர் அடிமட்டத்திற்கு செல்லும் என்பதில் ஐயமில்லை.

4.   கெஅடிலான் எல்லா இமாலய ஊழல்களையும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் பணத்தை ‘ஆட்டை’ போட்டு சுகபோக வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும். அரச விசாரணை ஆணையம் அமைத்து எல்லா ஊழலையும் விசாரிப்பது காலத்தின் கட்டாயம்.

1MDB-1024x731

 

 

 

 

 

 

இந்த வேளையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்), அரச மலேசிய காவல்துறை (பிடிஆர்எம்), தேசிய தணிக்கை இலாகா மற்றும் நீதிமன்றம் போன்றவை விசாரணை மற்றும் தண்டனை வழங்கப்படும் போது நியாயமான நிலைப்பாட்டை கொண்டு செயல்பட வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகள் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலையீடு இன்றி நடைபெற வேண்டும்.

5.   கெஅடிலான் எப்போதும் அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக இண்டர்போல் உடன் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறது. 14வது பொதுத் தேர்தல் முடிவு தெரிந்த பிறகு வெளிநாட்டில் அரசியல் அடைக்கலம் கொடுக்காமல் இருப்பதை இது உறுதி செய்யும்.

 

டத்தோ சைபூஃடின் நஸூதியோன் இஸ்மாயில்

கெஅடிலான் தலைமைச் செயலாளர்

#கேஜிஎஸ்


Pengarang :