PBTSELANGOR

சுங்கத்துறை ஜிஎஸ்டி வரிக் கடனை தீர்க்கவில்லை, ஊராட்சி மன்றங்கள் உறுதி அளித்தது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 11:

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே), மலேசிய அரச சுங்கத்துறை இலாகா (கஸ்தாம்) இன்னும் மாநகராட்சிக்கு திருப்பித் தர வேண்டிய பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பாக்கிப் பணத்தை ஒப்படைக்காமல் இருப்பதை உறுதிப் படுத்தியது. பெட்டாலிங் ஜெயா மேயர், டத்தோ முகமட் அஸிஸி முகமட் ஜைன் கூறுகையில், இந்த தாமதம் நடக்கக் காரணம் பல்வேறு ஆவணங்கள் கொண்டிருக்கும் நடைமுறை மற்றும் சுங்கத்துறையின் மற்ற பிரச்சனைகளும் அடங்கும் என்று தெரிவித்தார்.

”   இன்னும் திருப்பித் தர வேண்டிய பாக்கி உள்ளது. சுங்கத்துறை முழுமையான பணத்தை ஒப்படைக்கவில்லை. பல்வேறு ஆவணங்கள் கொண்டு செயல்படும் சுங்கத்துறை நடைமுறையினால் இந்த தாமதம் நடக்கக் கூடும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆனாலும், இவை அனைத்தும் சுங்கத்துறையின் செயல்பாடுகள். இதேபோன்ற கேள்வியை சுங்கத்துறையிடம் கேட்க வேண்டும்,” என்று மாதாந்திர எம்பிபிஜே பேரணிக்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

இதனிடையே, சுங்கத்துறை சிலாங்கூரில் உள்ள 12 ஊராட்சி மன்றங்களிடம் ரிம 36 மில்லியன் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (ரிம 5.99 மில்லியன்), கிள்ளான் நகராண்மை கழகம் (ரிம 5.6 மில்லியன்), பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (ரிம 3.24 மில்லியன்), காஜாங் நகராண்மை கழகம் (ரிம 5.1 மில்லியன்), அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (ரிம 5 மில்லியன்), செலாயாங் நகராண்மை கழகம் (ரிம 4.1 மில்லியன்), சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (ரிம 2.7 மில்லியன்), செப்பாங் நகராண்மை கழகம் (ரிம 2.1 மில்லியன்), கோலா லங்காட் மாவட்ட மன்றம் (ரிம 688,457), உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம்  (ரிம 725,319 ), சபாக் பெர்னாம் மாவட்ட மன்றம் (ரிம 447,181) மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் (ரிம 198,040) போன்ற ஊராட்சி மன்றங்கள் அனைத்தும் அடங்கும் என்று தெரியவந்துள்ளது.

#கேஜிஎஸ்


Pengarang :