MEDIA STATEMENT

டான்ஸ்ரீ ராவூஸ் நியமனம் நாட்டின் நீதித்துறை சரித்திரத்தில் ஒரு கருப்புப்புள்ளி

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அறிக்கை 

நாட்டின் தலைமை நீதிபதியாக ஆகஸ்ட் 4 அன்று, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கும் டான்ஸ்ரீ முகமட் ராவூஸ் ஷாரிப் நியமனம் நீதித்துறை மற்றும் கூட்டரசு அரசியலமைப்பு சட்ட சரித்திரத்தில்   ஒரு கருப்புப்புள்ளியாக கருதப்படுகிறது .

இந்த நியமனத்தோடு, மேல்முறையீடு நீதிமன்றத்தின் தலைவராக டான்ஸ்ரீ ஸூல்கிப்ளி மகிநூடின் தொடர்ந்து நீட்டிப்பு போன்றவை பல்வேறு விதமான எதிர்ப்புகள் இருந்தும் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் எதையும் பொருட்படுத்தாமல் செயல்படுத்தி இருக்கிறார். சட்டத்துறை வல்லுனர்கள், வழக்கறிஞர் மன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக முக்கியமான ஒன்று, நாட்டின் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் இந்த நியமனத்திற்கு இடமே இல்லை.

 

TanSriRaus_edit_resize

 

 

 

 

 

 

 

இந்த சமயத்தில் நான் அனைத்து பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி மேன்மை தங்கிய பேரரசரிடம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான நியமனத்திற்கு ஆட்சேபனை செய்யும் வகையில் மகஜர் கொடுத்துள்ளது பாராட்ட பட வேண்டிய ஒன்று.

மலேசிய வழக்கறிஞர் மன்றம் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெற்ற அவசர பொதுக் கூட்டத்தில் டான்ஸ்ரீ ராவூஸ் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் மூலம் வழக்கறிஞர் மன்றம் இந்த நியமனங்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருப்பதை காட்டுகிறது.

மறுபடியும் சட்டத்திற்கு புறம்பான நியமனங்களை டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் செய்திருக்கிறார். நாட்டின் சட்டத்தையும் மற்றும் கூட்டரசு அரசியலமைப்பையும் மதிக்கவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

istana-kehakiman

 

 

 

 

 

நஜிப் ரசாக் தைரியத்துடன் செயல்படுவதை பார்க்கும் பொழுது சுயநலம் கொண்டவராகவும், தனது பதவியை தற்காத்துக் கொள்ள எதையும் செய்ய துணிந்தவாகவும் தெரிகிறது. பல்வேறு ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோகம் வழக்குகளில் சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டுகளை நஜிப் எதிர் நோக்கி உள்ளது நாட்டு மக்களுக்கு தெரியும்.

நஜிப்பின் இந்த புதிய நடவடிக்கையின் எதிரொலி என்னவென்றால், டத்தோ ஸ்ரீ நஜிப் மற்றும் தேசிய முன்னணி அரசாங்கத்தை வழிநடத்தும் வரையில் நமது நாட்டிற்கு தொடர்ந்து நற்பெயர் சீரழிந்து போகும். இது மட்டுமில்லாமல் நாட்டு மக்களின் சமூக நல மேலும் நாசமாகி விடும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியை பலப்படுத்தி எதிர் வரும் தேர்தலில் தேசிய முன்னணியை வீழ்த்துவோம். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். நஜிப்பின் அரசாங்கத்தின் கீழ் பதவியில் உள்ளவர்கள் மட்டுமே சம்பாதித்து கொண்டிருக்கும் நடைமுறையை தூக்கி எறிந்து, எல்லா தரப்பினரும் பயன் பெறும் வகையில் நல்லாட்சியை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வழங்கும் என்று உறுதி கூறுகிறேன்.

அன்வார் இப்ராஹிம்

ஆகஸ்ட் 5, 2017

தமிழாக்கம்: கு. குணசேகரன்


Pengarang :