RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: சிலாங்கூர் ஊராட்சி மன்றங்களுக்கு பாராட்டுகள், தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க வேண்டும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 7:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, மாநிலத்தின் 12 ஊராட்சி மன்றங்களும் சிறப்பாக செயல்பட்டு வருவதை கண்டு பெருமிதம் கொள்வதாக கூறினார். ஊராட்சி மன்றங்கள் 74% மக்களின் திருப்தி நிலையை அடைந்ததாக ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தெரிவித்தார்.

இந்த அடைவுநிலை, 12 ஊராட்சி மன்றங்களும் மேலும் சிறப்பான வெற்றியை நோக்கி செல்ல ஊக்குவிப்பாக அமையும் என்று கூறினார்.

AZMIN

 

 

 

 

 

 

”  சிலாங்கூரின் அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மெர்டேக்கா சென்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் சிலாங்கூரின் 12 ஊராட்சி மன்றங்களின் சேவையில் 74% மக்கள் மனநிறைவு அடைவதாக வெளியிட்டுள்ளது,” என்று தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் செய்தி பதிவு செய்திருந்தார்.

இதற்கு முன்பு, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் செயலாளர், டத்தோ முகமட் அமீன் அமாட் ஆயா கூறுகையில், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் மிக சிறந்த அடைவுநிலையை கொண்டதாக உள்ளது. கடந்த ஆண்டிற்கான சேவை தரம் 18% உயர்ந்த நிலையில் இருப்பதாக கூறினார். அடுத்து இடத்தில் கிள்ளான் நகராண்மை கழகமும் மூன்றாவது வரிசையில் அம்பாங் ஜெயா நகராண்மை கழகமும் இருப்பதாக முகமட் அமீன் கூறினார்.

ஷா ஆலம் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற கிள்ளான் நகராண்மை கழகத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

மேலும் கூறுகையில், பொது மக்களின் புகார்களும் குறைந்த நிலையில் உள்ளது என்றார். 2015-இல் 21% இருந்த நிலை 2016-இல் 15% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

இந்த அடைவுநிலை, நகராண்மை கழக பணியாளர்கள் மேலும் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க ஊக்குவிப்பாக அமையும் என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :