RENCANA PILIHANSELANGOR

ஐபிஆர் வெற்றியடைந்ததால் மாநில அரசாங்கம் 2018-இன் வரவு செலவு திட்டத்திலும் தொடர்கிறது

பத்து கேவ்ஸ், அக்டோபர் 1:

சிலாங்கூர் மாநில அரசாங்கம்,  பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களை (ஐபிஆர்) 2018-இன்  வரவு செலவு திட்டத்தில் தொடர்ந்து செயல்படுத்தும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இது வரை ஐபிஆர் மூலம் மக்கள் பயன் அடைந்தனர் என்றும் மொத்தத்தில் இத்திட்டம் இமாலய வெற்றி பெற்றதாக குறிப்பிட்டார். மாநில அரசின் கொள்கைகள் மக்களுக்கு நன்மைகள் சென்று அடைந்துள்ளது. மாநிலத்தின் வளம் மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வழி பயன் தந்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார்.

”   இது மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இது வரை 42 ஐபிஆர் திட்டங்களின் மூலம் மாநில அரசு ரிம 2 பில்லியனை மக்களுக்கு செலவிட்டுள்ளது. மக்கள் நலத்திட்டங்கள் நல்ல பயன் தந்த நிலையில் எதிர் வரும் 2018-இன் வரவு செலவு திட்டத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்,” என்று தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் நடைபெற்ற  ‘ஐபிஆர் திட்டங்களை பிரபலமாக்குவோம் மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசாருடன் மக்கள்’ எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அஸ்மின் அலி 207 மக்களுக்கு ரிம 1.06 மில்லியன் மதிப்பிலான ஹிஜ்ரா கடனுதவி, உணவுக் கூடை பற்றுச் சீட்டு மற்றும் பல மாநில அரசின் உதவி நிதிகளை எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :