SELANGOR

டிங்கில்  தீப ஒளி கலைவிழா 2017

 

டிங்கில், அக்டோபர் 16:

டிங்கில் தீபாவளி கார்னிவலை முன்னிட்டு தீப ஒளி கலைவிழா 2017 நேற்று டிங்கில் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் திரு ஹஜி போர்ஹான் தலைமையில் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கப்பட்டது. இரு தினங்களுக்கு தொடர்ந்து நடைப்பெறும் இந்நிகழ்வில் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில அரசின் பள்ளி புத்தக பை அன்பளிப்பு, மாத உணவு பொருட்கள் அன்பளிப்பு, தீபாவளிக்கான அன்பளிப்பு மற்றும் சிலாங்கூர் மாநில இலவச சுகாதார அட்டைகளும் தீபாவளியை முன்னிட்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிப்பாங் நகராணமைக் கழக உறுப்பினர் திரு கேனத் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இளைஞர்கள் முறையான வழியில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக உறுவாக்கப்பட்ட இந்த தீபாவளி சந்தைக்கு இரண்டாவது ஆண்டாக சிறப்பு அனுமதியினை வழங்கியுள்ள சிப்பாங் நகராண்மைக் கழகம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியினை பங்கேற்பாளர்கள் தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் , இளையோர் மேம்பாட்டு பிரிவு தலைவர்கள் மற்றும் பங்கேற்பாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்நிகழ்வினை மேலும் சிறப்பாக நடந்திட, இதன் அலங்கார அன்பளிப்பாளர்களான வசீகரா டேகோ மற்றும் பொருட்களின் அன்பளிப்பாளர்கள் டி ஆர் ட்ரான்ஸ்போர்ட் போன்ற நிறுவனங்களுக்கு பாராட்டுக்கள்.

செய்தி: தீபன் சுப்பிரமணியம்


Pengarang :