RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: சிலாங்கூர் மாநில மேம்பாட்டில் கவனம் செலுத்துங்கள்

பத்துமலை, அக்டோபர் 1:

சிலாங்கூர் மக்களின் நன்மையை முன்னிலைப்படுத்தும் நோக்கத்தை முக்கியமாகக் கருதும் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட் அஸ்மின் அலி, தனிநபர் குற்றசாட்டுகளுக்கு கவனம் செலுத்தாமல் சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டில்  கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது மீன் விலை ஏற்றம் கண்டு இருப்பதற்கு  எதிர்க்கட்சி ஆதரவாளர்களான மத்தியஸ்தர்கள் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு எதிர்வினை ஆற்றும்வகையில்
அஸ்மின் இவ்வாறு பதில் கூறினார்.
வாழ்வாதார செலவுகள் அதிகரித்து உள்ளது என்பதை அனைவரும் அறிவர். இதற்கு அரசியல் கட்சியை  எப்படி குற்றம் சாட்ட முடியும்?  மத்திய அரசாங்க நிலையில் நமக்கு அதிகாரம் இல்லாத போது மக்கள் நலனுக்கான  கொள்கைகளை எப்படி அமல்படுத்துவது? என்று அஸ்மின் கேள்வி எழுப்பினார்.

மாநில அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட கொள்கைகளை அமலாக்கம் செய்து
வருகிறோம். சிலாங்கூர் மற்றும் பினாங்கு போன்ற மாநிலங்கள்
மக்கள்  கருணை  கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். மாநிலத்துக்கு அப்பால் செயல்படுத்த எத்ரிர்வரும் பொதுத் தேர்தலுக்காக காத்திருக்கிறோம் என்று  தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள அல் கைரியா
மசூதியில்  நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட  மக்கள் கருணை திட்டம் மற்றும் முதலமைச்சருடன் நல்லுறவு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிருபர்களுடன்
பேசுகையில் அஸ்மின் இவ்வாறு கூறினார்.

மேன்மைத் தங்கிய சுல்தான் சிலாங்கூர் சுல்தான் சாராபுதீன் இட்ரிஸ் ஷா
கட்டளைப்படி, மக்கள் வழங்கிய அதிகாரத்தைக் கொண்டு, அவர்களுக்குப்  பயனைக்
கொண்டு வரும் வகையில் மாநிலத்தை நிர்வாகம் செய்வதே மாநில அரசாங்கத்தின்
முக்கியச் செயலாகும்.  ஏறிவிட்ட விலைவாசியால் மக்கள் வாழ்க்கை
இறுக்கத்தில் இருக்கின்றனர்.ஆகவே  ஆதாரமற்ற, மக்களுக்கு  உதவிடாத
குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் வீணே சுமத்த வேண்டாம். பணவீக்கம்,
பொருட்களின் வரி அமலாக்கம், பொருட்கள் சேவை வரி ஆகிய காரணிகளால் விலை
ஏற்றம் கண்டுள்ளது.ஆகவே  மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கமும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார் அஸ்மின் அலி.

BANGUNAN SUK


Pengarang :