NATIONAL

ஏமாற்று வேலை இல்லையெனில் – எல்லை சீரமைப்பை நிறுத்துக

ஷா ஆலம்,பிப்ரவரி02:

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் எவ்வித ஏமாற்று வேலையும் இல்லை.ஒவ்வொரு தேர்தலும் நேர்மையாகவே நடைபெறுகிறது என அன்மையில் நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியது உண்மையெனில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லை மறுசீரமைப்பினை உடனடியாக நிறுத்துமாறு கெஅடிலான் உதவித்தலைவர் சம்சூல் இஸ்கண்டார் முகமட் அஃகின் கோரிக்கை விடுத்தார்.

நஜிப்பின் அந்த அறிக்கை வெறும் அரசியல் நாடகம் என்றும் வர்ணித்த அவர் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற அவர்கள் தரப்பு பல்வேறு ஏமாற்று வேலைகளிலும் அர்த்தமற்ற யுக்திகளையும் கையாளலாம் என்றும் கூறினார்.இதில் எல்லை மறுசீரமைப்பும் அடங்கும் என்றும் கூறினார்.

இத்திட்டம் ஒருதலைபட்சமானது.மேலும்,இனவாதம் ரீதியிலும் அடங்கும் வேளையில் ஜனநாயகத்திற்கும் எதிரானது என்றார்.

இதற்கிடையில்,எல்லை மறுசீரமைப்பினால் தனது தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தொடர்பில் போலிஸ் புகார் செய்திருப்பதாகவும் கூறிய அவர் எல்லை மறுசீரமைப்பு என்பதே தேர்தல் ஜனநாயகத்திற்கு எதிரானதுதான்.தேர்தலில் வெற்றி பெற எதிர்மறையான யுக்திதான் என்றும் கூறினார்.

நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் போலியான முகவரியில் பதிவு செய்திருப்பதையும் சுட்டிக்காண்பித்த அவர் அந்த முகவரிகள் அவர்கள் தங்கும் இடத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் மீண்டும் புக்கிட் கட்டில் தொகுதியை மீண்டும் தேசிய முன்னணி கைப்பற்றவே இத்தொகுதியில் அதிகமான வாக்காளர்களை எல்லை மறுசீரமைப்பு காரணத்தை கூறி பதிவு செய்திருப்பது ஒருவகை ஏமாற்று வேலைதான் என்றும் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.


Pengarang :