RENCANA PILIHAN

வரலாற்று பெருமை பேசும் கெர்லிங் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம்

உலுசிலாங்கூரில் மலேசிய இந்தியர்களின் வாழ்வியல் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிடும் பெரும் பகுதிகளில் கெர்லிங் வட்டாரமும் ஒன்றாகும். கெர்லிங் வட்டாரத்தில் முன் அதிகமான தோட்டங்கள் இந்தியர்களின் அடையாளமாக விளங்கிய வேளையில் இன்று தோட்டங்கள் தொலைந்துப்போய் அங்குன்றும் இங்கொன்றுமாய் இந்தியர்களின் அடையாளங்கள் வரலாற்று சான்றுகளாக தென்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில், பத்துமலை தைப்பூசத்திற்கு அடுத்து சிலாங்கூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தைப்பூசத் திருநாளை கொண்டாடி மகிழும் கெர்லிங் அருல்மிகு ஸ்ரீசுப்பிரமணியர் ஆலயம் இவ்வட்டாரத்தில் இந்தியர்களின் அடையாளமாக உயிர்ப்பித்திருக்கிறது. இந்தியர்கள் இப்பகுதிகளில் கணிசமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு இவ்வாலயம் பெரும் சான்று.
தோட்டங்களில் எப்படி இன்னமும் நம் முன்னோர்களின் சுவாசம் உணர முடிகிறதோ அதுபோல் இந்த ஆலயம் உயிர்க்கொண்டிருக்கும் பகுதியில் முருகனை வணங்க சென்றாலோ அல்லது அந்த பக்கமாய் போனாலோ ஆலயத்தின் அழகில் நம் மனம் கவரப்படுவதோடு மட்டுமின்றி நம் இனத்தின் பெருமையையும் எண்ணிப்பார்த்து மகிழும் உணர்ச்சிப்பூர்வமான சூழலையும் உணர்வையும் அஃது ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு தழுவிய நிலையில் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில்
ஒன்றாக விளங்கிடும் இவ்வாலயம் சுற்றுப்பயணிகளையும் அதிகம் கவர்ந்த தலமாகவும் விளங்குகிறது. அதேவேளையில்,
உலுசிலாங்கூரிலிருந்து தஞ்சோங் மாலிம் செல்லும் பிரதான சாலையில் அமைந்திருக்கும் இக்கோவில் தற்போது மிகவும் அழகாகவும் நவீனமான தோற்றத்தில் எளிம் மிகுந்தும் காணப்படுகிறது.
தைப்பூசத்தின் போது உள்ளூர் வெளியூர் பக்தர்களோடு வெளிநாட்டு பக்தர்களும் திரளாக கலந்துக் கொண்டு முருகப் பெருமானை வணங்கி செல்லும் அதேவேளையில் தோட்டத்துண்டாடலுக்கு பின்னர் இங்கிருந்து வெளியேறிய முன்னாள் குடிவாசிகளும் தங்களின் கடந்தக்கால நினைவனைகளை மீட்டுச் செல்லவும் இங்கு வந்து செல்வது வழக்கம்.

இவ்வாலயம் தொடர்ந்து அதன் செயல்பாடுகளை ஆக்கப்பூர்வமாகவும் விவேகமாகவும் முன்னெடுத்து செல்ல சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து அதன் பங்களிப்பாக மானியங்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. சிலாங்கூர் மாநில அரசாங்கம் இஸ்லாம் அல்லாத வழிபாடு தலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அதன் பட்ஜெட்டில் தனித்துவமான ஒதுக்கீடு செய்வது குறிப்பிடத்தக்கது.


Pengarang :