NATIONAL

நஜிப் மீதான குற்றச்சாட்டு உள்ளூர் & வெளிநாடு பத்திரிக்கைகளின் கவனத்தை ஈர்த்தது

கோலாலம்பூர்,ஜூலை04:

இன்று காலை நாட்டின் முன்னாள் பிரதமர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்ட வேளையில் அவர் மீதான இவ்வழக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. இவ்வழக்கு தொடர்பிலான செய்திகளை சேகரிக்க உள்ளூர் மற்றும் வெளிநாடு செய்தியாளர்கள் காலை மணி 5 முதல் நீதிமன்ற வளாகத்தில் குமிந்தனர்.பகாங் நாடாளுமன்ற உறுப்பினருமான நஜிப் மீது எஸ்ஆர்சி தொடர்பிலான வழக்கு உட்பட நம்பிக்கை மோசடி என பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காலை மணி 7.37க்கு ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் இருந்து நஜிப் துன் ரசாக் காரில் அழைத்துக் கொண்டு நீதிமன்ற நோக்கி கொண்டு வரப்பட்டார். ஜாலான் டூத்தா நீதிமன்றத்திற்கு நஜிப் அழைத்து வரும்போது அவரோடு ஊழல் தடுப்பு ஆணையத்தை சார்ந்தவர்களும் போலிஸ்காரர்களும் உடன் இருந்தனர். உயர் நீதி மன்றத்தில் டத்தோ அஸ்மான் அப்துல்லா முன்னிலையில் இவ்வழக்கு நடைபெற்ற வேளையில் அரசு தரப்பு வழக்கறிஞராக நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் களமிறங்கினார்.

1எம்டிபி நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி நிறுவனம் தொடர்பில் இதற்கு முன்னர் விளக்கம் அளிக்க முன்னாள் பிரதமர் நஜி இருமுறை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை அளித்திருந்த வேளையில் நேற்று பிற்பகல் 2.35 மணி அளவில் நஜிப் அவரது இல்லதில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :