SELANGOR

குளிர் பான பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்யுங்கள்; பொது மக்களுக்கு அறிவுறுத்து !

ஷா ஆலம், ஜன.16-

சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் கார்பன் தாக்கத்தை குறைக்கவும் பானங்களை அருந்திய பின்னர் அந்தப் பாக்கெட்டுகளை பொது மக்கள் மறுசுழற்சி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நெஸ்லே நிறுவனத்துடன் இணைந்து தெத்ரா பெக் நிறுவனம் மேற்கொள்ளும் 2019 கேர்டோன் ( CAREton) எனும் குளிர் பான பாக்கெட்டுகள் மறுசுழற்சி இயக்கத்தின் முயற்சியை பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் பாராட்டினார்.

பயன்படுத்திய பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதால் பூமியை பாதுகாப்பதோடு மேலும் பல நல்ல பயன்களையும் நாம் பெறுவதோடு எதிர்கால சந்ததியினர் மத்தியில் நல்ல தாக்கத்தை இந்நடவடிக்கை ஏற்படுத்தும் என்றார் அவர்.

இந்த நிறுவனத்தின் நடவடிக்கையை முன்மாதிரியாக கொண்டு இதர பெரிய நிறுவனங்களும் தங்களின் சமூக பொறுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த இயக்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளையில், சிலாங்கூரை பசுமை நிறைந்த மாநிலமாக உருவாக்கும் நோக்கத்துடன் மாநில அரசு சுற்றுச்சூழலை மேம்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பெரிய நிறுவனங்களின் இது போன்ற நடவடிக்கைகள் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :