SELANGOR

தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் பக்காத்தான் தலைவர்கள் எந்நேரமும் உழைக்கின்றனர்

செமினி, பிப்.13:

இவ்வட்டாரத்தில் அமைச்சர்கள் அதிகளவில் காணப்படுவதால், அவர்களின் வருகையை இங்கு நடைபெறவிருக்கு இடைத்தேர்தலுடன் தொடர்பு படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மாறாக, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கால நேரம் பார்க்காமல் அல்லும் பகலும் உழைக்கின்றனர் என்று கெ அடிலான் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி கூறினார்.

அதேவேளையில், சிலாங்கூரை 2008ஆம் ஆண்டு பக்காத்தான் அரசாங்கம் கைப்பற்றியது முதல் செம்னி தொகுதியும் உலு லங்காட் வட்டாரமும் துரித வளர்ச்சி கண்டு வந்துள்ளன என்று அவர் சுட்டிக் காட்டினார்.

செமினி வட்டாரம் துரித மேம்பாடு கண்டு வரும் ஒரு நகரமாக உருவாகி வருவதைக் கண்டு பிரதமரே அண்மையில் ஆச்சரியப்பட்டார் என்ற தகவலையும் அஸ்மின் வெளியிட்டார்.


Pengarang :