SELANGOR

பாக்காத்தான் ஆட்சியில் மாநில கையிருப்பு உயர்ந்துள்ளது

செமினி, பிப்.27-

2008ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், சிலாங்கூர் அரசாங்கத்தின் கையிருப்பை 400 மில்லியன் வெள்ளியில் இருந்து 2.8 பில்லியன் வெள்ளிக்கு பாக்காத்தான் அரசாங்கம் உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிட்டதைத் தவிர்த்து மாநில அரசாங்கம் அதன் நிதியைச் சிக்கனமாகவும் சிறப்பாகவும் செலவிட்டதால், இந்த கையிருப்பு அதிகரிப்பு சாத்தியமானது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

மக்களுக்காக 3 பில்லியன் வெள்ளி செலவிடப்பட்ட பின்னரும் அதன் கையிருப்பு இரண்டு மடங்காக உயர்ந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

“அந்த 6 பில்லியன் வெள்ளியைச் செலவிடாமல் இருந்திருந்தால், நம் கையிருப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால், மக்களுக்கு உதவாமல் நிதி வளர்ச்சி ஏற்பட்டு என்ன பயன்?” என்று அவர் வினவினார்.


Pengarang :