SELANGOR

செமிஞ்சே மக்களுக்கு ஐமானின் 5 உறுதி மொழிகள்

சேமிஞ்சே சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான பாக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் முகமட் ஐமான் ஜைனாலி வெற்றி பெற்ற பிறகு நிறைவேற்ற வேண்டிய ஐந்து உறுதி மொழிகளை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1. பசுமையான செமிஞ்சே

செமிஞ்சே சட்ட மன்ற தொகுதியின் சுற்றுசூழலை பாதுகாத்து, அது தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட நீர்தேக்கக் காடுகளாகவும் சிலாங்கூரின் சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்களாகவும் நிலைநிறுத்தப்படும்.

2. பாதுகாப்பான செமிஞ்சே

கிராமப்புற மற்றும் வீடமைப்பு பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்கள் வலுவான நிலையில் இருக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு குற்றச்செயல்கள் குறைக்கப்படும்.

3. முன்னேற்றமான செமிஞ்சே

செமிஞ்சே வட்டாரத்தின் பொருளாதார மேம்பாடு அதன் மக்களுக்கு தேவையான நன்மைகள் அடைய முனைப்புடன் செயல்பட வேண்டும்

4. சுகாதாரமான செமிஞ்சே

தற்போது இயங்கி வரும் அரசு சுகாதார கிளினிக் மேம்படுத்தப்பட வேண்டும். மேலும் செமிஞ்சே நகரும் விவேக கிளினிக் அறிமுகப்படுத்தி மக்களுக்கு சேவை வழங்கப்படும்.

5. தொடர்பு எல்லையில் செமிஞ்சே

சிலாங்கூர் மாநில ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பேருந்து சேவையை விரிவாக்கவும், தொடர்ந்து பேருந்து நிலையம் மற்றும் வாடகை கார் நிலையம் மேம்படுத்தப்படும்.


Pengarang :