NATIONAL

பி 40 பெடூலி கெசிஹத்தான் திட்டம் : அடுத்த மாதம் தொடங்கும்

கோலாலம்பூர், மார்ச் 15-

பி40 சுகாதார காப்புறுதி திட்டமான பெடூலி கெசிஹத்தான் பி 40 திட்டத்தை புரோடெக் ஹெல்த் நிறுவனத்துடன் இணைந்து மலேசிய சுகாதார அமைச்சு அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கவிருக்கிறது.

தொடக்கக் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் தொற்றா நோய்களான நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு பிரச்னைகளைக் கொண்டவர்கள் மீது கவனம் செலுத்தவிருப்பதாக புரோடெக் ஹெல்த் நிருவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் லத்திப் அபு பாக்கார் கூறினார்.

இந்தத் திட்டமானது, சுமார் 3.94 மில்லியன் பேர் எனக் கணிக்கப்பட்டுள்ள இ40 தரப்பினருக்கு மலேசிய சுகாதார அமைச்சு இலவச மருத்துவச் சேவை வழங்குவதற்கு ஏதுவாக அமையும் என்று அவர் சொன்னார்.

புள்ளி விபர அறிக்கையின்படி, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மேற்கூறப்பட்ட நோய்களால் அவதிப்படுவதற்கு அபாயம் அதிகம் இருக்கிறது. மேலும் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவர்களில் 47.6 விழுக்காடு இந்தத் தரப்பினரே என்றும் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :