NATIONAL

மலாய், ஆங்கில மொழியில் கணிதம் மற்றும் அறிவியல் பாட போதனை

ஷா ஆலம், மார்ச் 9-

மலாய் அல்லது ஆங்கில மொழியில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை கற்பிக்கப்படுவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சில மலேசியர்கள் இந்தப் பாடங்களுக்கு ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையில் மேலும் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த வழிமுறை கையாளப்படுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்

ஆயினும், அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஏனெனில், ஒரு சிலருக்கு குறிப்பிட்ட மொழியில் பயில்வதால் சாதகமான பலன் கிடைக்கும் வேளையில், வேறு சிலருக்கு தாங்கள் விரும்பிய மொழியில் பயில்வதற்கு உரிமை வழங்கப்படவில்லை எனத் தோன்றும் என்றார் அவர்.

குறிப்பாக, பலர் இந்தப் பாடங்களை ஆங்கிலத்தில் பயின்றால் வேலை சந்தையில் அதிக செல்வாக்கு இருக்கும் என்று நம்புகின்றனர் என பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருந்தபோது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு துன் மகாதீர் பதிலளித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுடின் அப்துல்லா மற்றும் அனைத்துலக தொழில்துறை அமைச்சர் டத்தோ டெரெல் லெய்கிங் ஆகியோர் உடனிருந்தனர்.


Pengarang :