PUTRAJAYA, 8 Mei — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad semasa sidang media khas sempena setahun pemerintahan kerajaan Pakatan Harapan di Bangunan Perdana Putra baru-baru ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

புதிய தொழில்நுட்பத்தில் பரிணமிப்பீர்! – பிரதமர் மகாதீர்

புத்ராஜெயா, மே 14:

புதிய யுகத்தில் தாங்கள் பின்தங்கிவிடாமல் இருக்க புதிய தொழில்நுட்பத்துடன் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும்படி பொது மக்களை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக் கொண்டார்.
தமது பள்ளி காலத்தைப் போல் இப்போதைய பள்ளி சூழல் இல்லை. இப்போது புதிய யுகத்தில் நாம் பரிணமிக்கிறோம் என்று இங்கு சுல்தான் அப்துல் ஹாமிட் கல்லூரி பழைய மாணவர்கள் சங்க ஒன்று கூடல் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

“இன்று நாம் பள்ளியில் கற்றல் நடவடிக்கைக்கு கணினி போன்ற சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். இதன் வழி இந்த தொழில்நுட்ப பயனீட்டிற்கும் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ளலாம்” என்று மகாதீர் ஆலோசனை கூறினார்.

” அரசாங்கம் ஒரு புதிய முறையை அமல்படுத்தும்போது அதனால் மாணவர்களே அதிக நன்மை அடைவார்கள் “என்றார் மகாதீர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமரின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவும் கலந்து கொண்டார்.


Pengarang :