NATIONAL

விசா விலக்களிக்கப்பு நாடுகள் பட்டியல் – மலேசியா இடம்பெறவில்லை

கோலாலம்பூர், மே 2-

அமெரிக்காவிற்குச் செல்ல விசா விலக்களிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா இடம்பெற்றிருந்ததாக இணையத் தளம் வெளியிட்ட செய்தி தவறானது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

மலேசியர்களுக்கான விசா திட்டத்தில் மாற்றம் குறித்து எந்தவித அறிவிப்பையும் நாடு இன்று வரை பெறவில்லை என்று அது கூறியது.

அமெரிக்காவிற்குச் செல்ல விரும்பும் மலேசியர்கள் வழக்கம் போல் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தியது.

அண்மையில், இணையத் தளம் ஒன்றில் விசா விலக்களிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜமைக்கா உட்பட மேலும் 9 நாடுகள் என்ற தலைப்பில் வெளியான செய்தி தவறானது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.


Pengarang :