NATIONAL

நாட்டு மக்கள் பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டுகோள்!!!

கோலா லம்பூர், ஜூன் 11:

ஒவ்வொரு பெருநாள் காலங்களில் அமல் படுத்தப்படும்  “ஓப்ஸ் செலாமாட் ” நடவடிக்கை மூலம் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தாலும் பொது மக்கள் பொது போக்குவரத்து வசதிகளை பயன் படுத்த வேண்டும் என்று மலேசிய குழந்தைகளை பாதுகாப்போம் இயக்கத்தின் தலைமை இயக்குநரும் மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்தின் இணை பேராசிரியருமான முனைவர் குழந்தையன் கே. சி. மணி வேண்டுகோள் விடுத்தார்.

தூரமான பயணங்களுக்கு பயனீட்டாளர்கள் பொது போக்குவரத்து வசதிகளை பயன் படுத்தி முனைப்பு காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதன் மூலம் வாகனங்களின் வேகக் கட்டுபாட்டு ஏற்படுத்த முடியும் என்றார்.

” முதன் முதலில், பயனீட்டாளர்கள் பொது போக்குவரத்து வசதிகளுக்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சொந்த வாகனங்களை விட பொது போக்குவரத்து வாகனங்கள் பாதுகாப்பானது. இரண்டாவது, சொந்த வாகனங்களை பயன்படுத்துவோர் வேகக் கட்டுபாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,” என்று பெர்னாமா செய்தி பிரிவு நிகழ்ச்சியில் நேற்று இரவு இவ்வாறு கூறினார் .

ஓப்ஸ் செலாமாட் 15, நோன்பு பெருநாள் காலத்தில்  மே 29 தொடங்கி 12 நாட்கள் அமல் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#பெர்னாமா


Pengarang :