ANKARA, 25 Julai — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad bersama Presiden Turki, Recep Tayyip Erdogan sempena Lawatan Rasmi beliau ke Turki di Kompleks Presiden hari ini. — fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
ANTARABANGSANATIONAL

மலேசிய முதலீட்டாளர்களை துருக்கி வரவேற்கிறது

அங்காரா, ஜூலை 26-

தங்கள் நாட்டில் குறிப்பாக தற்காப்பு தொழில் துறையில் மேலும் பல மலேசிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்று துருக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
துருக்கியின் அரசாங்க மற்றும் தனியார் துறைக்கும் மலேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சு வார்த்தைகளில் தற்காப்பு தொழில் துறை முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் ரிசெப் தாய்யிப் எர்டோகன் கூறினார்.

1964ஆம் ஆண்டு முதல் இரு வழி தொடர்புகளைக் கொண்டிருக்கும் இவ்விரு நாடுகளின் வர்த்தக ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பல்வேறு துறைகளில் குறிப்பாக பொருளாதாரத் துறைகளில் இவ்விரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய ஒத்துழைப்பு குறித்து முக்கிய முடிவை தாமும் டாக்டர் மகாதீரும் எடுத்துள்ளதாக எர்டோகன் தெரிவித்தார்.


Pengarang :