NATIONALSELANGOR

குடிநீர் முறை மீ்து கணக்காய்வு -டாக்டர் சேவியர் ஜெயகுமார்

கோலாலம்பூர் ஜுலை 26:

எல்லா மாநிலங்களிலும் நடப்பு குடிநீர் முறை மீ்து கணக்காய்வு மேற்கொள்ளும்படி தேசிய குடிநீர் சேவை ஆணையம் (ஸ்பான்) மற்றும் குடிநீர் சேவை இலாகா பணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்காய்வு நடப்பு குடிநீர் நிர்வாகம் மற்றும் முறை மீது கவனம் செலுத்துவதோடு, எந்தவொரு குடிநீர் நெருக்கடியையும் அடையாளம் கண்டு அதற்குத் தீர்வு காண உதவும் என்று குடிநீர், நில மற்றும் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.

“குடிநீர் கையிருப்பைக் காட்டிலும் மக்களின் குடிநீர் தேவை அ‌திகமாக இருப்பதற்கு தற்போதைய மேம்பாட்டு நடவடிக்கைகளே காரணம். ஆகையால், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தேவையான நீர் வளங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி அதற்குரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வது அவசியம்” என்று இங்கு 2019 மலேசிய அனைத்துலக மாநாட்டை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

தற்போது எந்த ஒரு மாநிலமும் முழுமையான குடிநீர் தொழிற்துறை சுற்றுச்சூழல் முறை மீதான உண்மையான புள்ளி விவரங்களைக் கொண்டிருக்கவி‌ல்லை என்று சேவியர் குறிப்பிட்டார்.


Pengarang :